பிறந்து 50 நாட்களே ஆன குழந்தையுடன் மனைவி எடுத்த முடிவு : கணவனுக்கு நேர்ந்த பரிதாபம்!!

354

விழுப்புரத்தில்..

விழுப்புரம் அருகே கணவன் வரதட்சணை கொடுமை செய்ததால் மனமுடைந்த மனைவி, பிறந்து 50 நாட்களேயான பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

மனைவிக்கு தற்கொலைக்கு காரணமான கணவனை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர். செய்வதையெல்லாம் செய்துவிட்டு இப்படி கள்ள அழுகை அழுதால் மட்டும் ஊர் உலகம் நம்பாது..

நடையை கட்டு போலீஸ் ஸ்டேஷனுக்கு என்பதுபோல் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ள இவர்தான் பச்சிளம் குழதந்தையோடு மனைவி தற்கொலை செய்து கொள்ள காரணமான அப்துல்லா.

திருவண்ணாமலை மாவட்டம் ஆவூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அப்துல்லா. இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் கடக்கால்தோப்பு பகுதியை சேர்ந்த பிர்தோஸ் என்ற 21 வயது இளம்பெண்ணுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது.

இவர்களுக்கு கடந்த 50 நாட்களுக்கு முன்பு ஹயானா என்ற பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் தனது தாய் வீட்டில் இருந்த பிர்தோஸ், அருகே உள்ள விவசாய கிணற்றில் குழந்தையுடன் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பிர்தோஸ் மற்றும் குழந்தை ஹயானாவை சடலமாக மீட்டு, பிரதே பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், பிர்தோஸின் தாய் ஜன்மா, வரதட்சணை கொடுமை காரணமாகவே தனது மகள் கைக்குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதாக செஞ்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

புகாரையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருமணத்தின்போது பிர்தோஸ்-க்கு 10 பவுன் நகை போடுவதாக இருவீட்டாரும் பேசி உள்ளனர். முதலில் 7 பவுன் நகை போட்ட பெண் வீட்டார், மீதமுள்ள 3 பவுன் நகையை திருமணத்திற்கு பிறகு போடுவதாக உறுதி அளித்தனர்.

ஆனால் குழந்தை பிறந்தும்கூட 3 பவுன் நகை போடவில்லை என தெரிகிறது. மேலும் போட்ட 7 பவுன் நகையையும் பிர்தோஸ் தாய் வீட்டிலேயே வைத்ததாக கூறப்படுகிறது.

பேசிய நகையையும் போடாமல், போட்ட நகையையும் தாய் வீட்டிலேயே வைத்தால் என்ன அர்த்தம் என மனைவியுடன் தினமும் அப்துல்லா சண்டை போட்டதாக தெரிகிறது.

இதனால் மனமுடைந்த பிர்தோஸ் பச்சிளம் குழந்தையுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதையடுத்து வரதட்சணை கொடுமை செய்த அப்துல்லாவை போலீசார் கைதுசெய்து சிறையில் அடைத்தனர்.