வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் : 100 இடங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயநிலை!!

621

வவுனியா நகரில் 20க்கு மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன் 100 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் அபாயநிலமையும் காணப்படுவதாக வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணினையினர் தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் அதிகரித்துள்ள டெங்கு நுளம்பின் தாக்கம் தொடர்பில் வினவிய போதே அவர்கள் இவ்விடயத்தினை தெரிவித்தனர்.

வவுனியா நகரப்பகுதியில் உள்ள கடைகள், கடைகளைச் சூழவுள்ள பகுதிகள், கடைகளிற்கு முன்புற்கு வடிகான்கள், கடைகள் அமைந்துள்ள காணி, கடையின் மேற்தளம்,

மேல்மாடிக்குடியிருப்பு, குளிர்சாதனப்பெட்டியைச் சூழவுள்ள பகுதிகள் போன்ற இடங்களை நீர்தேங்கி டெங்கு நுளம்பு பெருக்கமடையக் கூடிய சூழல் காணப்படாதவாறு தொடர்ச்சியாக சுத்தமாக பேணிக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்வதுடன்

வவுனியா நகரப்பகுதியில் 20இற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். பெரும்பாலானவர்கள் வெளி மாவட்டங்களில் தொற்றுக்கு உட்பட்டவர்களாக இளங்காணப்பட்டபோதிலும் 3-5 வரையான நோயாளர்கள் வவுனியா நகரப்பகுதியில் தொற்றுக்குள்ளானவர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.

மேலும் பார்வீதி, மில் வீதி, இறம்பைக்குளம் பகுதி, ஹொரவப்பொத்தான வீதி போன்ற பகுதிகளில் ஏறத்தாழ 4- 6 வரையான வர்த்தக நிலையங்களில் டெங்குநோய்க்கான பிரதான குடம்பி அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் ஒரு வர்த்தக நிலையத்தில் நோயாளி ஒருவரும் அடையாளப்படுத்தப்பட்டுள்ளார்.

டெங்கு நுளம்பு பெரும் இடங்களை வைத்திருப்பவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது. இந்த நோய் பரம்பலைக் கட்டுப்படுத்த பொது மக்களினுடைய ஒத்துழைப்பு அவசியமானது.

பொது மக்களினுடைய அக்கறையின்மை தான் இந்த நுளம்பு பெருக்கத்திற்கு காரணமாக இருக்கிறது. பல தடவை அறிவுறுத்தல் வழங்கியிருந்தும் அவர்களது கவலையீனம் இந்த நுளம்பு உற்பத்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் நோயாளர்கள் உருவாகியுள்ளார்கள். எனவே தினமும் ஒவ்வொரு குடும்பமும் தமது வீடு , கடை என்பவற்றை சுத்தம் செய்து டெங்கு நுளம்புகளை அழிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். என தெரிவித்தனர்.