வவுனியா வரலாறு..!!

3854


Vavuniya Map

வவுனியா இலங்கையின் வடமாகாணத்தில் உள்ள ஒரு நகரமாகும். வவுனியா மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். இதன் எல்லைகளாக மன்னார், முல்லைத்தீவு, அனுராதபுரம், திருகோணமலை ஆகிய மாவட்டங்கள் அமைந்துள்ளன.



இலங்கையில் இரு தசாப்தங்களிற்கும் மேலாக நடந்த உள்நாட்டுப் போரினால் மக்கள் இடம் பெயர்ந்து இப்பகுதியில் குடியேறினார்கள். இலங்கையின் வடக்குக் கிழக்கு மாகாணத்தில் மிகவும் வளர்ச்சியுடைய நகரமாக வவுனியா அமைந்துள்ளது. ஈழப்போரில் வன்னிப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்தவர்களில் பல்லாயிரக்கணக்கானோர் இம்மாவட்டத்திலேயே உள்ளனர்.

யாழ் பல்கலைக் கழகத்தின் வவுனியா வளாகம் வவுனியா நகரப் பகுதியில் அமைந்துள்ளது. இவ் வளாகத்தின் ஒரு தொகுதி A30 வவுனியா மன்னார் வீதியில், வவுனியா நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவிலுள்ள பம்பைமடுப் பகுதியில் அமைத்துள்ளது.



இதை விட வவுனியா குருமன்காட்டில் விஞ்ஞான பீடமும், மற்றும் புகையிரத நிலைய வீதியூடாகச் செல்லும் உள்வட்ட வீதியில் முகாமைத்துவக் கற்கைகளும் பார்க் வீதியில் யாழ் பல்கலைக் கழகத்தின் ஆங்கில பீடமும் அமைந்துள்ளது.



பாடசாலைகள்


வவுனியா இலங்கைத் திருச்சபை தமிழ்க் கலவன் பாடசாலை(1878 இல் அமைக்கப்பட்டது, வவுனியாவின் முதல் பாடசாலை)
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
இறம்மைக்குளம் மகளிர் கல்லூரி
வவுனியா பெரியகோமரசன்குளம் மகா வித்தியாலயம்
வவுனியா தரணிக்குளம் கணேஸ் வித்தியாலயம்
வவுனியா விபுலாநந்தா கல்லூரி
சைவப்பிரகாச மகளிர் கல்லூரி
வவுனியா இந்துக் கல்லூரி
வவுனியா பூந்தோட்டம் தமிழ் மகா வித்தியாலயம்
ஓமந்தை மத்திய கல்லூரி
வவுனியா சர்வதேசப் பாடசாலை
தொழில் நுட்பக் கல்லூரி

வவுனியா தொழில் நுட்பக் கல்லூரி வவுனியா மன்னார் வீதியில் ஏறத்தாழ 5 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இதை விட வவுனியா பூந்தோட்டத்தில் தேசிய கல்வியியல் கல்லூரி அமைந்துள்ளது. மேலும் விவசாயக் கல்லூரி வவுனியா யாழ்ப்பாணம் வீதியில் தாண்டிக்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இந்தக் கல்லூரி, 1989 ஆம் ஆண்டு வடகிழக்கு மாகாணத்தில், விவசாய டிப்ளோமா படிப்பை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்டது.


தனியார் கல்வி நிலையங்கள்

1.வவுனியா விஞ்ஞான தொழிநுட்ப முன்னேற்ற கல்விக் கழகம் – வஸ்டெக் – (VASTEC)
2.IDM
3.NIITA
4.GATEWAY

அஞ்சல் அலுவலகம்

வவுனியாவில் அரச அஞ்சல் அலுவலகம் தவிர முகவர் (Agency) அஞ்சல் நிலையங்களும் அமைந்துள்ளன.


அஞ்சற் குறியீடு: 43000
தொலைபேசி குறியீடு: 024
ஆரம்பிக்கும் இலக்கங்கள்
024-2 வவுனியா இலங்கைத் தொலைத் தொடர்பு நிலையம்,
024-3 சீடிஎம்ஏ தொலைபேசிகள்.
024-4 வவுனியா சண்ரெல்
024-5 வவுனியா லங்காபெல்

வானொலிகள்

இலங்கை வானொலி வன்னிச்சேவை
பண்பலை நாதம்
வன்னியின் குரல் (வர்த்தக விளம்பரசேவை)

பத்திரிகைகள்-சஞ்சிகைகள்

நிலம் – கவி இதழ்
தேடல் – இளையோர் தொடர்புசாதனப்பிரிவினது
பூங்கனி – மாதமொருமுறை

இந்து ஆலயங்கள் 

சித்திவிநாயகர் ஆலயம், குடியிருப்பு
வவுனியா கோவில்குளம் சிவன் ஆலயம்
பூந்தோட்டம் லக்ஷ்மி சமேத நரசிங்கர் ஆலயம்
வவுனியா மகாவிஷ்ணு கோயில்
குருமன்காடு காளிகோயில்
ஸ்ரீ கந்தசாமி ஆலயம்
சிந்தாமணிப் பிள்ளையார் ஆலயம்
சிதம்பரபுரம் பழனி மலை முருகன் ஆலயம்
ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்-வெளிக்குளம்
சமளன்குளம் கல்லுமலை பிள்ளையார் ஆலயம்
சமளன்குளம் ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம்
ஸ்ரீ முத்துமாரி அம்மன் தேவஸ்தானம் தெற்கிலுப்பைக்குளம்
ஸ்ரீ நரசிம்மர் ஆலயம் தெற்கிலுப்பைக்குளம்
ஐயப்பன் தேவஸ்தானம் கோவில்குளம்.

கிறித்தவ ஆலயங்கள்

கல்வாரி (இயேசு பகவானின் அவதாரங்களை உள்ளடக்கிய சிற்பங்கள் உள்ளது)
இறம்பைக்குளம் புனித அந்தோனியார் தேவாலயம்
புனித செபஸ்ரியார் தேவாலயம் தெற்கிலுப்பை
குருசாண்டவர் தேவாலயம்- தச்சன்குளம்
ஜெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ஜ மன்றம் – உக்குளாம் குளம்

முஸ்லிம் பள்ளிவாசல்கள்

வவுனியா பெரிய பள்ளிவாசல்
மதீனாநகர் பள்ளிவாசல்

போக்குவரத்து
வவுனியாவினூடான தொடருந்து சேவைகள் பளை முதல் கொழும்பு வரை நடைபெறுகின்றன. யாழ்ப்பாணத்தில் இருந்து பேருந்து சேவைகள் வவுனியா ஊடாக கொழும்பு மற்றும் பிர நகரங்களுக்குச் செல்கின்றன.