மழைக்காலத்தில் கூந்தல் பராமரிப்பின் அவசியம்!!

503

hair

கோடைகாலத்தில் அதிகபடியாக வறண்டு பாதிப்பிற்கு உள்ளாகும் கூந்தல் மழைக்காலத்தில் நன்கு குளிர்ந்து எப்போதும் ஈரப்பதத்துடன் இருப்பதால் வலுவிழந்து இருக்கும். அதுமட்டுமின்றி, ஈரப்பதத்துடன் எண்ணெய் பசை இருந்தால், கூந்தலிருந்து ஒருவித துர்நாற்றம் வீச ஆரம்பிக்கும்.

ஆகவே மழைகாலத்தில் கூந்தலில் இருந்து துர்நாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, கூந்தலை அன்றாடம் முறையாக பராமரித்து வரவேண்டும். இப்போது எளிய முறையில் கூந்தல் பராமரிப்பு வழிமுறைகளை பார்க்கலாம்…

ஸ்கால்ப்பானது சுத்தமாக இல்லாவிட்டால் மழை காலத்தில் அதிகபடியாக ஈரப்பசையினால் அரிப்புகளுடன், துர்நாற்றத்தை ஏற்படுத்தும். ஆகவே வாரத்திற்கு மூன்று முறை ஷம்பு போட்டு அலசினால், கூந்தலில் தூசுபடிவதை தவிர்க்கலாம். அப்படி பயன்படுத்தும் ஷம்பு, மழை காலத்தில் எண்ணெய் பசை அதிகமாக இருக்கும் ஷம்புவை பயன்படுத்தக்கூடாது.

ஏனெனில் இவை இன்னும் கூந்தலில் எண்ணெய் பசை அதிகரித்து துர்நாற்றத்தை அதிகரிக்கும். எனவே இயல்பாகவே எண்ணெய் பசை கொண்டவர்கள், மென்மையான ஷம்புவை பயன்படுத்த வேண்டும். அதிலும் ஷம்புவிற்கு பதிலாக நெல்லிகாய், சீகைக்காயை போன்றவற்றை கொண்டு கூந்தலை பராமரிப்பது இன்னும் சிறந்தது.

மேலும் கூந்தலில் துர்நாற்றம் வீசாமல் இருக்க வேண்டுமானால், கூந்தலுக்கு ஹேர் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். அதிலும் கண்ட கண்ட ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்தாமல் விலை அதிகமாக இருந்தாலும் நல்ல தரமான ஹேர் கண்டிஷனர்களை பயன்படுத்த வேண்டும்.

அல்லது இயற்கை ஹேர் கண்டிஷனர்களையே எப்போதும் தேர்வு செய்யுங்கள். அதிலும் எலுமிச்சை சாறு, பேக்கிங் சோடா அல்லது அப்பிள் விதை வினிகர் போன்றவற்றை பயன்படுத்தி கூந்தலை அலசுவது இன்னும் சிறந்தது.

மழைக்காலங்களில், ஹேர் ஸ்ட்ரைனின், ஹேர் கலரிங் போன்றவற்றை தவிர்க்கவேண்டும். ஏனெனில் அது கூந்தலில் பாதிப்பை அதிகப்படுத்துவதுடன், ஸ்கால்ப்பையும் அதிக பாதிப்புக்குள்ளாகும். எனவே இந்த செயல்களை தவிர்ப்பது நல்லது.