இளவரசன் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள திவ்யா மறுப்பு..!

535


divyaதர்மபுரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இளவரசன், திவ்யா ஆகியோர் காதல் கலப்பு திருமணம் செய்து கொண்டனர். அப்போது திவ்யா தந்தை தற்கொலை செய்துகொண்டார்.
இதையடுத்து அங்கு வன்முறை ஏற்பட்டது. தொடர்ந்து தனது மகளை கண்டுபிடித்து தருமாறு திவ்யாவின் தாயார் சென்னை உயர் நீதிமன்றில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து திவ்யா நீதிமன்றில் ஆஜரானார். தொடர்ந்து வழக்கு நடந்து வந்த நிலையில், தனது தாயாருடனேயே தான் இருக்க விரும்புவதாக திவ்யா கூறினார்.



இந்தநிலையில் கடந்த 4ஆம் திகதி தர்மபுரி ரயில் தண்டவாளத்தில் இளவரசன் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். இளவரசன் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது பெற்றோர் இளங்கோவன் கிருஷ்ணவேணி ஆகியோர் நீதிமன்றத்தை நாடினர்.

தற்போது அவரது உடல் தருமபுரி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. அந்தப் பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளது.



இந்தநிலையில் சென்னை உயர் நீதிமன்றில் மில்டன் என்பவர், இளவரசன் இறுதி சடங்கில் அவரது மனைவி திவ்யா கலந்து கொள்ள வேண்டும்.



இந்து முறைப்படி சடங்குகள் நடக்க வேண்டும் என்று கோரி மனு செய்திருந்தார். இதுகுறித்து பதில் அளிக்குமாறு மாவட்ட நிர்வாகத்துக்கு நீதிமன்று உத்தரவிட்டது.


இதையடுத்து மாவட்ட நிர்வாகம் திவ்யாவின் இல்லத்திற்கு சென்று, இதுகுறித்து தெரிவித்தது. தற்போது உள்ள சூழ்நிலையில் நான் கலந்து கொள்ள இயலாது என்று கூறிய திவ்யா, கடிதம் மூலமாகவும் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் இதனை நிதிமன்றில் தெரிவிக்க உள்ளது.