ஸ்டோபரி ஐஸ்கிரீம் செய்வது எப்படி! !

568

strawberrymargaritapie

தேவையான பொருட்கள்

அரை லீட்டர் சீனி
200 கிராம் சோள மா
1 மேசைக் கரண்டி ஜெலட்டின்
1 தேநீர்க் கரண்டி ஃப்ரெஷ் க்ரீம் (தேவைப்பட்டால்)
200 கிராம் ஸ்டோபரி பழங்கள்
1 தேநீர்க் கரண்டி ஸ்டோபரி எசென்ஸ்

செய்முறை

பாலை அடுப்பில் வைத்துக் கொதி வந்ததும் சீனியைச் சேர்த்து மறுபடி காய்ச்சவும். ஆறிய பால் சிறிது எடுத்து அதில் சோளமாவை கலந்து தனியே வைக்கவும்.

தண்ணீரில் ஜெலட்டினை கரைத்து அடுப்பில் 2 நிமிடங்கள் வைத்து அதில் கொதித்துக் கொண்டிருக்கிற பால் சோளமாவைச் சேர்க்கவும்.

சோளமா வெந்து கலவை ஓரளவு கெட்டியானதும் இறக்கி ஆற விடவும். ஆறியதும் எசென்ஸும் ஃப்ரெஷ் கிரீமும் சேர்த்து, மிக்சியில் விப்பர் பிளேிட்டில் ஒரு சுற்று ஓட விட்டு பொடியாக நறுக்கிய அல்லது அரைத்த ஸ்டோபரி சேர்த்துக் கலந்து 2 மணி நேரங்களுக்கு குளிர்சாதனப்பெட்டியில் குளிர வைக்கவும். ஐஸ்கிரீம் நன்றாக அதன் பதத்தை அடைந்ததும் பரிமாறவும்.