தம்பியை முதுகில் சுமந்து 57 மைல் தூரம் நடக்கும் சிறுவன்!!

551

Bro

பெருமூளை வாதம் குறித்த விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, 15 வயது சிறுவன், அந்நோயால் பாதிக்கப்பட்ட தனது தம்பியை முதுகில் சுமந்து 57 மைல் தூரம் விழிப்புணர்வு நடைபயணம் மேற்கொண்டுள்ளான்.

அமெரிக்காவை சேர்ந்த ஹண்டர் காண்டி(15) என்ற சிறுவன், கடந்த 5 ஆம் திகதி, மிச்சிகன் மாகாணம், லேம்பர்ட்வில்லேயில் இருந்து தனது தம்பியை முதுகில் சுமந்து நடைபயணத்தை தொடங்கினான். நேற்று மாலை 4 மணியளவில் 57 மைல் தூரத்தில் உள்ள ஆன் ஆர்பர் நகரை வந்தடைந்தான்.

அங்குள்ள மிச்சிகன் பல்கலைக்கழகத்துக்கு வந்து சேர்ந்த காண்டியை, நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் கட்டித்தழுவி வரவேற்று பாராட்டினர்.

இந்த நடைபயணத்தில் பிராண்டன் பள்ளியில் மாற்று திறனாளிகள் விளையாடும் மைதானத்துக்காக 2 லட்சம் டொலர் நிதியுதவி செய்யுமாறு காண்டி கோரிக்கை வைத்துள்ளான்.

நடைபயணத்தின் முடிவில் பேசிய காண்டி, நிதி திரட்டுவதற்காக மட்டும் நான் இந்த நடைபயணத்தை மேற்கொள்ளவில்லை. இந்நோயின் தீவிரத்தை உணர்த்துவதற்காகவே நடைபயணம் மேற்கொண்டுள்ளேன் என்று கூறியுள்ளான்.