ஆரோக்கியத்தை காட்டிக் கொடுக்கும் நகங்கள்!!

471


nails_002

நமது கைகளுக்கு அழகூட்டும் நகங்கள், நமது ஆரோக்கியத்திலும் முக்கிய பங்கு வகிப்பது உங்களுக்கு தெரியுமா.ஆம் நகங்கள் நமது உடல் ஆரோக்கியத்தை காட்டிக் கொடுத்துவிடும். சிலநேரங்களில் சிலரது கைவிரல் நகங்கள் வழக்கத்திற்கு மாறாக வெளுத்துப்போய் காணப்படும். ரத்த சோகை இருக்கிறது என்பதற்கான அறிகுறிதான், நகத்தின் இந்த திடீர் மாற்றம்.



ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் அளவில் குறையும் போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகும், உடனே மருத்துவரை அணுகுவதுடன் இரும்புச்சத்து அதிகமுள்ள கீரை மற்றும் உணவுகளை உட்கொள்வது நலம்.

சிலருக்கு நகம் அதனுடைய இயற்கையான நிறத்தில் இல்லாமல், நிறம் மாறி அழுக்காக இருப்பது போல் தோன்றும். `பங்கஸ்’ என்று சொல்லக்கூடிய ஒருவகை கிருமியினால் ஏற்படும் நோயே நகத்தை இவ்வாறு பாதிக்கச் செய்கிறது.



நீல நிறத்தில் கைவிரல் நகம் இருந்தால் `சயனோஸிஸ்’ என்று சொல்லப்படும் நோயின் அறிகுறி இருக்கிறதென்று அர்த்தம். அதாவது ரத்தத்தில் சரியாக இருக்க வேண்டிய ஆக்ஸிஜன் அளவு மிக குறைவாக இருக்கிறதென்று அர்த்தம்.



இருதய நோய், நுரையீரல் நோய் உள்ளவர்களுக்கு கைவிரல் நகங்கள் குவிந்து, பருத்து, பளபளவென்று இருக்கும்.
சருமத்தைப் போல சில சமயங்களில் நகம் அதிகமாக காய்ந்து, உடைந்து போகக்கூட வாய்ப்புண்டு. நகம், செதில் செதிலாக உரிந்து வருவதும் உண்டு.


நகங்களை பாதுகாத்துக் கொள்ளுங்கள்
* நகங்களை ஒரு கருவியாக பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* குழிபறிப்பது, பழங்களின் தோல் உரிப்பது, கண்டவற்றையும் சுரண்டிக் கொண்டிருப்பது போன்ற விஷயங்களுக்கு நகங்களைப் பயன்படுத்தக்கூடாது.
* இது நகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவதோடு கிருமிகள் தொற்று நோய் ஏற்படவும் காரணமாகிறது.
* ரசாயனங்கள் சேர்த்த நகப்பூச்சுகளையும் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும், சமையல் அறை, பசை மற்றும் இரசாயனங்களை உபயோகப்படுத்தும் போது கையுறை அணிந்து கொள்ள வேண்டும்.
நகங்கள் ஏன் வளர்கிறது?

நகங்கள் தேவையில்லாமல் வளர்கிறது என்று நினைக்க வேண்டாம், இது ஒரு கழிவுப் பொருள் தான். கெரட்டின் என்னும் உடற்கழிவுதான் நகமாக வளர்கிறது, நகங்களும் சுவாசிக்கும், வியர்வையை வெளியிடும் என்றால் நம்பமாட்டீர்கள் தானே. ஆனால் இவை உண்மைதான்.
அதேபோன்று நகத்தின் உட்புற பாகங்களுக்கு தேவைப்படும் ஒட்சிசனை சுவாசத்தின் மூலம் பெற்றுக் கொள்கிறது.நகத்தில் 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றும்.