வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தின் 82 வது ஆண்டு நிறைவினை கொண்டாடிய பழைய மாணவர்சங்கம் (படங்கள் )

784


11990625_10153110785321088_8264428279248204860_n

வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில்  (தேசிய பாடசாலை)இன்று  14.09.2015 திங்கட்கிழமை  வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர் சங்கத்தினரின் ஏற்பாட்டில்  பாடசாலையின் 82 வது  நிறைவை  அதிபர் ஆசிரியர்கள் மாணவர்கள்  பழைய மாணவர்கள் சகிதம் காலை ஆராதனை  வேளையில் கேக்  வெட்டி கொண்டாடப்பட்டது.



மேற்படி நிகழ்வு பாடசாலையின் அதிபர் மரியதாஸ் தலைமையில் இடம்பெற்றது. காலை ஆராதனை   வேளையில்   கல்லூரியின் 82 ஆண்டு நிறைவை முன்னிட்டு  மாணவர்கள் கொடிகளை தமது சட்டையில் அணிந்து  கல்லூரியின் ஆண்டுநிறைவை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர் . அத்துடன் கல்லூரியின் 82  வருட சாதனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

1933 ஆம் ஆரம்பிக்கபட்ட வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் 82  ஆண்டுகளை கடந்து வன்னிமண்ணில் கல்வித்துறையில்   பல்வேறு சாதனைகளை புரிந்து தனக்கென ஒரு இடத்தை தொடர்ந்தும் தக்கவைத்து  வவுனியாவின் முன்னணி தேசிய பாடசாலையாக திகழ்கின்றமை யாவரும் அறிந்ததே.



மேற்படி கல்லூரியின்  82  வது ஆண்டு நிறைவை முன்னிட்டு இன்றுமாலை 4.30 மணியளவில் கல்லூரியின் பழைய மாணவர் சங்கம் ஐயாத்துரை  மண்டபத்தில் ஒன்றுகூடல் நிகழ்வு ஒன்றினையும்  நடாத்தியிருந் தனர். மேற்படி ஒன்றுகூடலின் போது  தற்போது பாடசாலையில் நடைபெறுகின்ற அபிவிருத்தி மற்றும் அழகு படுத்தல் வேலைத்திட்டங்கள்  மற்றும் எதிர்கால திட்டங்கள் மற்றும் மாணவர்களது  கற்றல் கற்பித்தல் செயலபாடுகள்  கல்வித்துறை சாதனைகள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது .



-பிரதேச நிகழ்வுகளுடன் கஜன் –


11108835_10153110780386088_6217685362312953114_n 11219681_10153111514861088_8683000587690459323_n 11221951_10153111515076088_6471887252537783908_n 11259900_10153110779411088_312985062940207213_n 11863436_10153110780291088_5877012884209574678_n 11942122_10153110778381088_1991164121324590295_o 11990625_10153110785321088_8264428279248204860_n 12002180_10153110780056088_5713433011543378805_n 12002849_10153110781021088_7493782774828350768_n 12003339_10153111515351088_4879343878937189431_n 12003963_10153110783076088_1579087260424160180_n 12009664_10153110781356088_8861974712090825256_n 12009682_10153110780511088_961704041410933815_n 12011141_10153110782321088_4584620300820230110_n 12019833_10153111514966088_4018605122137122256_n 12027710_10153110779561088_1420022085549964059_n 12027751_10153111515536088_1920739512647103602_n