சிரியாவில் இரசாயன ஆயுதத் தாக்குதல்…!

475


சிரியாவில் போர் நடவடிக்கைகளில் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கும் ”சரின்” என்னும் இரசாயனம் பயன்படுத்தப்பட்டதற்கான வலுவான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸும், பிரிட்டனும் கூறியுள்ளன.

ஒரு சம்பவத்தில் கிளர்ச்சிக்காரர்களுக்கு எதிராக சிரியாவின் அரசாங்கம் இந்த வகையிலான ”சரின்” வேதிப் பொருள் தாக்குதலை நடத்தியதற்கான உறுதியான ஆதாரம் இருப்பதாக பிரான்ஸ் கூறுகிறது.



தாக்குதலுக்கு உள்ளானவர்களின் இரத்த மாதிரியில் நடத்தப்பட்ட சோதனையில், அவர்களது இரத்தத்தில் அந்த சரின் வேதிப் பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் லோரண்ட் ஃபபியஸ் கூறியுள்ளார்.

இந்த முடிவுகள் தற்போது ஐநாவுக்கு கையளிக்கப்படுகின்றன. சிரியாவில் இந்த வையிலான இரசாயனத் தாக்குதல் நடத்தப்பட்டது என்று அறிவிப்பதற்கு முன்னதாக மேலும் ஆதாரங்கள் தேவை என்று அமெரிக்கா கூறுகிறது.



வடக்கு நகரான அலெப்போவில் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தியதாக கிளர்ச்சிக்காரர்களும், அரசாங்கமும் மாறி மாறிக் குற்றஞ்சாட்டுகின்றனர்.