இலங்கை செய்திகள்

இலங்கையில் கடல் சீற்றம் 18 படகுகள் கவிழ்ந்தன.. பலரை காணவில்ல.. தெஹிவளையில் பதற்றம்.. நான்கு மீனவர்களின் சடலங்கள் மீட்பு..

காலி பலப்பிட்டிய கடலுக்கு மீன்பிடிக்க சென்ற 20 மீன்பிடி படகுகளில் 18 படகுகள் கடலுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர். நாட்டில் நிலவிவருகின்ற கடும் காற்றுடன் கூடிய மிகமோசமான காலநிலை காரணமாகவே இந்த...

கடலுக்குச் சென்ற பல மீனவர்கள் மாயம்: இதுவரை மூன்று சடலம் மீட்பு

பலபிட்டி கடற்பரப்பில் மீன்பிடிக்கச் சென்ற 20 படகுகளில் 3 படகுகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அதில் பயணித்த இரண்டு மீனவர்களின் சடலங்கள் கரையொதுங்கியுள்ளதாகவும் தத்தளித்துக் கொண்டிருந்த 12 மீனவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அத தெரண...

கொழும்பிலிருந்து யாழ் நோக்கிச் சென்ற பஸ் விபத்து 20க்கு மேற்பட்டோர் படுகாயம்..

இன்று இலங்கை நேரம் இரவு 8 மணியளவில் கொழும்பில் இருந்து யாழ் நோக்கிச் சென்ற பயணிகள் பேருந்து ஒன்று கொடிகாமப் பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது. சற்று நேரத்திற்கு முன்னதாக இவ் விபத்து இடம்பெற்றதாக பஸ்ஸில் பயணித்த...

மன்னாரில் விளையாட்டு மைதானத்தில் தேவாலயம் கட்ட எதிர்ப்பு

மன்னார் பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையின் விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட்டுவரும், தேவாலயம் கட்டுவதற்காண நடவடிக்கைகளை தடுத்து நிறுத்துமாறு முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பறப்பாங்கண்டல் றோ.க.த.க. பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் பாடசாலை வளர்ச்சி சமூகமும்...

களனி பல்கலைக்கழக மாணவர்களிடையே மோதல் – அறுவர் படுகாயம்

களனி பல்கலைக்கழக விஞ்ஞான பீட மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த ஆறு பேர் கிரிபத்கொட மற்றும் ராகம வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று வியாழக்கிழமை இரவு 11 மணியளவில் இந்த மோதல்...

வெள்ளைக்கொடி ஏந்தி இலங்கைக்கு தஞ்சம் கேட்டுவர ராமேஸ்வரம் மீனவர்கள் முடிவு!

இலங்கை சிறையில் உள்ள 49 மீனவர்களை விடுதலை செய்ய கோரி, ஜூன் 22ல், ராமேஸ்வரம் மீனவர்கள் படகில் வெள்ளை கொடி ஏற்றி, இலங்கையிடம் தஞ்சம் கேட்டு செல்ல முடிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம், மண்டபம்...

பின்லேடனை கொல்ல உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு யு.எஸ். விருது

    அல்கொய்தா இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கொல்ல அமெரிக்க சீல் படையினருக்கு உதவிய நைட்விஷன் தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஈழத் தமிழருக்கு அந்நாட்டின் உயரிய விருதான 'சம்பியன் ஒப் சேஞ்ச்' (Champion of...

கட்டுநாயக்கா பிரதேசத்தில் மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை..!

கட்டுநாயக்கா பிரதேசத்தில் வீட்டு அறையில் பாடசாலை மாணவி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி கற்கும் 15 வயதான இம்மாணவி நேற்று முன்தினம் மாலை தற்கொலை செய்து கொண்டதாக...

கொழும்பில் டெங்கு நோய்த் தொற்று அதிகரிப்பு!

கொழும்பு மாவட்டத்தில் டெங்கு நோய் தொற்று தொடர்பில் அவதானமாக இருக்குமாறு சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. டெங்கு நோய் தொற்று தொடர்பில் மருத்துவ நியுணர்கள் மேற்கொண்ட பரிசோதனையின் மூலம் எதிர்வரும் இரு மாதங்களில் டெங்கு...

மன்னாரில் விபத்து- 20 வயது இளைஞர் பலி..!

மன்னார் தாராபுரம் - எருக்கலம்பிட்டி பிரான வீதியில் நேற்று (புதன்கிழமை) மாலை இடம் பெற்ற விபத்தில் தாராபுரம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாராபுதத்தைச் சேர்ந்த மூன்று இளைஞர்கள் உழவு இயந்திரத்தில் பயணித்துக் கொண்டிருந்த...

மலேசிய விமானத்தில் பறவை மோதியது!கட்டுநாயக்காவில் சம்பவம்!

  கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறக்கப்படவிருந்த பயணிகள் விமானம் ஒன்றில் பறவையொன்று மோதியுள்ளது. மலேசிய விமான சேவைக்குச் சொந்தமான விமானத்திலேயே பறவை மோதியுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் H.L.C.நிமல்சிறி...

கொழும்பு பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டது…!!

கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்டபீட மாணவி ஒருவர் டெங்கு நோய் தாக்கி இறந்துபோனதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேவேளை, டெங்கு பரவுகை காரணமாக ஏற்கனவே கொழும்பு பல்கலைக்கழகத்தின் சில பிரிவுகள் ஒரு வார காலத்துக்கு மூடப்பட்டுள்ளதாகவும்...

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபருக்கு 60 ஆண்டுகால சிறைத்தண்டனை

மகளை பாலியல் ரீதியாக துன்புறுத்திய நபர் ஒருவருக்கு 60 ஆண்டு கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. சிறுமியை பலவந்தமான முறையில் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக சிறுமியின் தந்தை மீது வழக்குத் தொடரப்பட்டிருந்தது.கேகாலை பிரதேசத்தில் இந்த சம்பவம்...

வெள்ளவத்தையில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் கைது..!!

வெள்ளவத்தை - வேலுவனாராம வீதியில் ஹெரோயின் போதைப் பொருளுடன் பெண் ஒருவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். தமக்கு கிடைத்த இரகசிய தகவல் ஒன்றை அடுத்து குறித்த பெண் நேற்று (செவ்வாய்க்கிழமை) கைது...

உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களுக்கெதிராக நடவடிக்கை!

தமது உத்தியோகபூர்வ இல்லங்களில் தங்கியிராத பிரதேச செயலாளர்களை பிரதேச நிர்வாக நடவடிக்கைகளிலிருந்து நீக்குவதற்கு பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு தீர்மானித்துள்ளது. பிரதேச செயலாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள உத்தியோகபூர்வ இல்லங்களில் அவர்களை தங்கியிருக்குமாறு அண்மையில் வெளியிடப்பட்ட...

இலங்கையில் தயாரிக்கப்பட்ட முதலாவது ஆளில்லா உளவு விமானம்!

இலங்கையில் முதல் முறையாக ஆளில்லா உளவு விமானம் ஒன்று மொரட்டுவ பல்கலைக்கழக பொறியியல் பீடத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. யூ.ஏ.வீ (UAV) என்ற பெயரிலான இந்த ஆளில்லா உளவு விமானத்தை மொரட்டுவ பல்கலைக்கழக...