தென் தாய்லாந்தில் குண்டுத் தாக்குதல்; 8 படையினர் பலி..!

தாய்லாந்தில் தெற்குப் பிராந்தியத்தில் நடந்துள்ள வீதியோரக் குண்டுவெடிப்பில் படைச்சிப்பாய்கள் 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். யால மாகாணத்தில் குரோங் பினாங் மாவட்டத்தில் இராணுவ வாகனங்களை இலக்குவைத்து சக்திமிக்க இந்தக் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதலில் இராணுவ...

பல்கலைக்கழக மாணவர்களின் மனநிலையை பரிசோதிக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு..!

பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை அனுமதிக்க முன்னதாக அந்த மாணவர்களை மனநிலை தொடர்பான பரிசோதனைக்கு உட்படுத்த அரசாங்கம் முன்வைத்துள்ள யோசனைக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ஊடகங்களுக்கு அண்மையில் கருத்துத் தெரிவித்த இலங்கை பல்கலைக்கழக மானியங்கள்...

வவுனியாவில் புதிதாக எட்டு பேருக்கு சமுர்த்தி நியமனம்..!

வன்னி மாவட்டத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சிறிரெலோ கட்சியினால் நேற்று (28.06) வவுனியா மாவட்ட செயலகத்தில் வைத்து சமுர்த்தி நியமனம் வழங்கப்பட்டது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, வன்னி மாவட்டத்தின் முல்லைத்தீவு, வவுனியாவைச் சேர்ந்த...

பிரித்தானியாவின் புதிய விசா நடைமுறைக்கு இலங்கை கண்டனம்..!

பிரித்தானியாவிற்கு செல்ல விண்ணப்பிப்பவர்கள், 3000 பவுண்ட்களை வைப்புச் செய்யவேண்டும் என்ற பிரித்தானிய அரசின் திட்டத்திற்கு இலங்கை கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜோன் ராங்கினுக்கு அறிவித்துள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர்...

மீள ஆரம்பிக்கிறது காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை..!

1990ம் ஆண்டு மூடப்பட்ட காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீள ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி எதிர்வரும் காலங்களில் சர்வதேச ரீதியில் டென்டர்களை அறிவிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக, இலங்கை சீமெந்து கூட்டுத்தாபன மற்றும் சீமெந்து நிறுவன...

வவுனியா மாங்குளத்தில் சட்ட விரோத மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேர் கைது..!

வவுனியா மாங்குளம், பாணிக்கன்குளம் பகுதியில் சட்ட விரோதமான முறையில் மரக்கடத்தலில் ஈடுபட்ட ஆறு பேரை, பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர். சந்தேகநபர்கள் ஒரு தொகை முதுரை மரக்கட்டைகளை டிரெக்டர் வண்டியில் ஏற்றிச் சென்றபோதே...

பாதுகாப்பற்ற ரயில் கடவை விபத்துகள் இவ்வருடம் 27 பேர் பலி.!

அண்மைக்காலமாக பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் ஏற்படும் விபத்துகள் அதிகரித்துள்ளதோடு இந்த வருடத்தில் மாத்திரம் பாதுகாப்பற்ற ரயில்வே கடவைகளில் இடம்பெற்ற விபத்துக்களில் 27 பேர் பலியாகியுள்ளனர். பாதுகாப்பற்ற ரயில் கடவையில் ஏற்பட்ட விபத்தில் மேலும் இருவர்...

ராமேஸ்வரம் மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையிடம் இன்று ஒப்படைப்பு..!

மன்னார் வளைகுடாவில் காணாமல் போன இராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேரை இலங்கை கடற்படையினர் மீட்டுள்ளனர். இவர்களை இன்று இந்திய கடலோர காவல் துறையிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கடந்த புதன் கிழமை இராமேஸ்வரத்தில்...

ATM இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது..!

களுத்துறை, கடுகுரந்த பிரதேச வங்கியொன்றில் ஏ.டி.எம் இயந்திரத்தில் கொள்ளையிட முற்பட்ட போது கைது செய்யப்பட்ட வெளிநாட்டவர்கள் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். களுத்துறை தெற்கு பொலிஸார் இவர்களை நேற்றைய தினம் கைது செய்திருந்தனர். சந்தேகநபர்கள்...

பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் த.தே.கூ இன்று தீர்மானம்..!

தேசிய பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற விஷேட செயற்குழுவில் கலந்துகொள்வது தொடர்பில் தீர்மானிக்க, தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகள் இன்று சந்திப்பொன்றை மேற்கொள்ளவுள்ளனர். தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் இலங்கை தமிழ் அரசுக்...

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ பயிற்சி..!

வவுனியா நெடுங்கேணி பிரதேச செயலக ஊழியர்களுக்கு அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வவுனியா கிளையினால் அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான பயிற்சி நெறிகள் வழங்கப்பட்டுள்ளது. நெடுங்கேணி பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் நேற்று (28.6) உதவி பிரதேச செயலாளர்...

சோமாலியாவின் அல்-ஷபாப் மூத்த தலைவர் அரச படையிடம் சரண்..!

சோமாலியாவில் இஸ்லாமிய ஆயுதக்குழுவான அல்-ஷபாப் இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான ஹஸன் தாஹீர் ஆவேயெஸ் அரச படைகளிடம் சரணடைந்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது. தலைநகர் மொகதீஷூவிலிருந்து வடக்காக சுமார் 500-கிலோமீட்டர் தொலைவில் உள்ள அடாடோ நகரில்...

வவுனியாவில் 118 வது சாரணர் உயர் கற்கைநெறியின் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு..!

கடந்த வருடம் 13/10/2012 தொடக்கம் 20/10/2012 வரை பீட்ரு (pedro – Nuwaraeliya) சாரண தேசிய பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற சாரணர் உயர் கற்கைநெறி பயிற்சியை நிறைவு செய்த சாரணத்தலைவர்களுக்கான சான்றிதழ்கள் எதிர்வரும்...

மேலும் 22 பேரை இலங்கைக்கு திருப்பி அனுப்பியது அவுஸ்திரேலியா..!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிச் சென்ற மேலும் 22 இலங்கையர்கள் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு அமைச்சர் பிரன்டன் ஒ கொன்னர் தெரிவித்துள்ளார். இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் இருந்து விமானம் மூலம்...

தமிழக முகாமில் இலங்கை அகதி அழகுராஜா தீக்குளித்து உயிரிழப்பு..!

ஆரணி மில்லர்ஸ் வீதியில் உள்ள ஒழுங்கு முறை விற்பனை கூடம் அருகில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது. இங்கு வசித்தவர் அழகுராஜா (வயது32). இவருக்கு குடிபழக்கம் இருந்து வந்தது. மேலும் கணவன்-மனைவிக்கிடையே அடிக்கடி...

வவுனியாவில் ஞாயிறன்று தியாகிகள் தினம்!

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் ஸ்தாபகரும் அதன் செயலாளர்நாயகமுமாகிய அமரர் கே.பத்மநாபாவின் 23 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, உயிர் நீத்த கட்சியின் அனைத்துத் தோழர்கள் மற்றும் ஏனைய கட்சிகளின் போராளிகள்,...