இலங்கையின் யுத்த சூனிய வலய கொலைக்களம் காண்பித்த மூவர் கைது..!
இலங்கையின் உள்நாட்டுப் போர் பற்றிய சர்ச்சைக்குரிய ஆவணப்படத்தை அனுமதி இன்றி பொதுமக்களுக்குத் திரையிட்டுக் காட்டியதற்காக மூவர் மலேசியாவில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர்.
‘No Fire Zone: In the Killing Fields of Sri Lanka’ என்ற அந்த ஆவணப்படத்தின்...
பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் தீ விபத்து..!
வாழைச்சேனை பாசிக்குடா முனை முருகன் கோவில் பகுதியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தினால் பாசிக்குடா கடற்கரைப் பகுதியில் இரண்டு கிலோ மீற்றர் தூரம் சேதமடைந்துள்ளது.
நேற்று இரவு 7.30 மணயிளவில் இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இத்தீயினால் தனியாருக்குச் சொந்தமான தென்னந் தோட்டங்கள்...
இத்தாலியில் உணவளித்த வயோதிபரை கடித்துக் கொன்ற 3 புலிகள்..
இத்தாலியில் கூண்டில் அடைக்கப்பட்டிருந்த புலிகளுக்கு உணவளிக்கச் சென்ற 72 வயது முதியவரை 3 புலிகள் கடித்துக் கொன்றன. இத்தாலியின் வடக்கே உள்ள மலைப் பகுதியில் இருந்த பினெரோலோ வனவிலங்கு காப்பகம் பொருளாதார நெருக்கடியால்...
யாழில் 6 மாதங்களில் 142 பேருக்கு காசநோய்..!
யாழ். குடாநாட்டில் கடந்த 6மாத காலப் பகுதியில் 142 பேர் காசநோய்க்கு இலக்காகி சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர் என்று மாவட்டக் காசநோய் கட்டுப்பாட்டு அதிகாரி டாக்டர் எஸ்.யமுனானந்தா தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்ததாவது: யாழ்ப்பாணத்தில் உள்ள மார்பு நோய் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் இந்த...
முற்றாக துண்டிக்கப்பட்ட கையை பொருத்தி சாதனை..!
திருகோணமலை பொது வைத்தியசாலையில் முற்றாகத் துண்டிக்கப்பட்டிருந்த கையினை சத்திர சிகிச்சை மூலம் மீண்டும் பொருத்தி இவ் வைத்தியசாலை வைத்தியர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
இச் சத்திர சிகிச்சை சம்பவம் கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்டது. அறுவைச் சத்திர சிகிச்சை நிபுணர் ரொகான்...
பான் கீ மூனின் விசேட பிரதிநிதி இலங்கை வருகை..!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் செயலாளர் நாயகம் பான் கீ மூனின், இளைஞர் விவகாரங்களுக்கு பொறுப்பான பிரதிநிதி அஹமட் அல்கெந்தாவி நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.
இளைஞர் பாராளுமன்றில் உரை நிகழ்த்தும்...
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படுகிறது..!
வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகள் நாளை நள்ளிரவுடன் கலைக்கப்படவுள்ளதாக அரச தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதற்காக அந்தந்த மாகாண முதலமைச்சர்கள் மற்றும் அமைச்சர்கள் அனுமதியளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி இந்த இரண்டு மாகாண சபைகளுக்கும்...
எகிப்தில் மீண்டும் இராணுவப் புரட்சி: ஜனாதிபதி பதவி நீக்கம்..!
எகிப்து நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பத்தை தொடர்ந்து அந்நாட்டு ஜனாதிபதி மோர்ஸியை இராணுவம் அதிரடியாக பதவியில் இருந்து நீக்கியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக நீண்ட காலம் பதவி வகித்து...
ரஷ்ய ஹெலிகாப்டர் நொறுங்கி விழுந்து 19 பேர் அதிர்ச்சி மரணம்..!
ரஷ்யாவின் வடக்கே இருக்கும் யாகுதியா பகுதியில் 11 குழந்தைகள் உள்பட 25 பயணிகள், 3விமான சிப்பந்திகளுடன் மிக் 8 ரக ஹெலிகாப்டர் சென்றது. அது திடீரென்று தீப்பிடித்து விழுந்து நொறுங்கியது.
இதில் குழந்தைகள் உள்பட 19பேர் பரிதாபமாக இறந்தனர். மற்றவர்கள் காயங்களுடன் உயிர்...
புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் நுழைந்தவருக்கு எதிராக சர்வதேச பிடியாணை..!
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் போட்டியின்போது, தமிழீழ விடுதலை புலிகளின் கொடியுடன் மைதானத்திற்குள் அத்துமீறி நுழைந்த யோகேஸ்வரன் மணிமாறனுக்கு எதிராக கொழும்பு பிரதான நீதவான் சர்வதேச பிடியாணை ஒன்றை பிறப்பித்துள்ளார்.
யோகேஸ்வரன் மணிமாறன்...
2 வயது தங்கையைச் சுட்டுக் கொன்ற 5 வயது அண்ணன்..!
அமெரிக்காவில் விளையாட்டாய் தாத்தாவின் துப்பாக்கியால், 5 வயது சிறுவன் ஒருவன் தனது 2 வயது தங்கையைச் சுட்டதில், அச்சிறுமி பரிதாபமாகப் பலியானாள்.
அமெரிக்காவின் கென்டுக்கி மாகாணம் ஹாப்கின்ஸ்வில்லி பகுதியில் வசித்துவரும் முதியவர், சம்பவத்தினத்தன்று வீட்டில் வைத்து தனது கைத்துப்பாக்கியை சுத்தம் செய்துக்...
அனைத்து பல்கலைக்கழக மாணவர் பேரவையினால் கொழும்பில் பாரிய ஆர்ப்பாட்ட பேரணி..!
அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் பேரவை ஒழுங்கமைத்துள்ள பாரிய பேரணியொன்று தற்போது கொழும்பு ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்திலிருந்து ஆரம்பமாகி ஹை லெவல் வீதி வழியாக கொழும்பு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நோக்கிசென்று கொண்டிருக்கிறது.
இதன்போது பிரசுரிக்கப்பட்ட...
வவுனியாவில் மதுபான விற்பனை நிலையமொன்றில் கொள்ளை..
வவுனியா நெடுங்கேணிப் பகுதியிலுள்ள மதுபான விற்பனை நிலையமொன்றிற்கு வந்த இருவர் பணத்தைக் கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகின்றது
நேற்று இரவு 9.10 மணியளவில் மதுபான நிலையம் பூட்டப்படும் வேளையில் இரு நபா்கள் வந்து தமக்கு சாராயம்...
அடுத்த வாரம் தனியார் பஸ்கள் வேலை நிறுத்தம்?
எதிர்வரும் வாரத்தில் நாடளாவிய ரீதியிலான பஸ் வேலை நிறுத்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.
பஸ் கட்டண உயர்வு குறித்து அதிகாரிகள் உறுதியான பதில் எதுவும் அளிக்காவிட்டால்...
இரா.சம்பந்தன் கனடாவில் விசேட உரை நிகழ்த்தவுள்ளார்..!
நாடுகடந்த தமிழீழ அரசியிலும் தமிழீழமும் எனும் தொனிப்பொருளில் கருத்தரங்கொன்று கனடாவில் இடம்பெறவுள்ளதாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் செய்திக்குறிப்பொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வட அமெரிக்க வாழ் தமிழ்மக்களின் பெருநிகழ்வாக ஆண்டுதோறும் இடம்பெற்று வரும் வட அமெரிக்க...
புலிகளுக்கு உதவியதை ஒப்புக் கொண்டார் சுரேஸ் சிறீஸ்கந்தராஜா!
விடுதலைப் புலிகளுக்கு இராணுவத் தொழில்நுட்பங்களை பெற்றுக் கொடுக்க உதவியதாக அமெரிக்க நீதிமன்றத்தில் சுமத்தப்பட்ட குற்றத்தை கனடாவின் வாட்டர்லூ பல்கலைக்கழக பொறியியல் பட்டதாரியான சுரேஸ் சிறீஸ்கந்தராஜா ஒப்புக்கொண்டுள்ளார்.
2004 செப்டெம்பர் மாதத்திற்கும் 2006 ஏப்ரல் மாதத்திற்கும்...