தொழிலுக்காக வெளிநாடு சென்ற 3000 இலங்கையர்கள் நாடு திரும்ப முறைப்பாடு!!

மத்திய கிழக்கு நாடுகளுக்கு தொழிலுக்காக சென்று மீண்டும் நாடு திரும்பும் நோக்கில் மூவாயிரத்திற்கும் அதிகமானவர்களிடமிருந்து முறைப்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கின்றது. ஒப்பந்த காலப்பகுதிக்குள் எவருக்கும் நாடு திரும்ப முடியாது என பணியகத்தின்...

வவுனியாவில் நடைபெற்ற ஒளவையாரின் நினைவு தினம்!!(படங்கள்)

தமிழ், சைவப் புலவர் ஒளவையாரின் நினைவு தினம் வரலாற்று பதிவுகளாக இல்லாத நிலையில், தை பௌர்ணமி தினமான இன்றைய (15) தினத்தை நினைவு தினமாக கொண்டு வவுனியாவில் அமைந்துள்ள அவரது சிலைக்கருகில் அனுஸ்டிக்கப்பட்டது. குமாரசாமி...

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினரின் தைப்பொங்கல் விழா!!(படங்கள்)

வவுனியா பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழகத்தினர் நேற்று காலை தைப்பொங்கல் விழாவை பூந்தோட்டம் லயன்ஸ் விளையாட்டுக் கழக மைதானத்தில் கொண்டாடினர். அதிகாலையில் ஒன்று சேர்ந்த பிரதேச இளைஞர்கள் பொங்கலிட்டு படைத்து தமது நன்றிக்கடனை சூரியபகவானுக்கு...

பேஸ்புக் நட்பால் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சிறுவன்!!

உத்தர பிரதேச மாநிலத்தில் தன்னுடன் எட்டாம் வகுப்பில் பயிலும் மாணவியுடன் பேஸ்புக்கில் நட்பு வைத்தமைக்காக ஒரு சிறுவன் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவம் தொடர்பாக அதே பாடசாலையில் பயிலும் இரண்டு மாணவர்கள் துப்பாக்கியுடன் கைது...

போராட்டத்திற்கு பயந்து தப்பிச் சென்ற 200 பேர் கடலில் மூழ்கி பரிதாபமாக பலி!!

தெற்கு சூடானில் போராட்டத்திற்கு பயந்து தப்பிச் செல்ல முயன்ற 200 பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு சூடானின் முன்னாள் துணைப் பிரதமர் ரீக் மச்சர் தனது ஆதரவாளர்களுடன் அரசுக்கு எதிராக...

பிள்ளையின் ஆசையை தீர்க்க கரு சுமக்கும் பாட்டி!!

அமெரிக்காவில் உட்டா மாகாணத்தில் வசிக்கும் மூதாட்டி தனது மகளுக்காக வாடகைத் தாயாகி உள்ளார். பெரு நாட்டைச் சேர்ந்தவர் லோரினோ மெக்கினான். இவர் அமெரிக்காவின் உட்டா பல்கலைக் கழகத்தில் கல்வி பயின்றபோது அந்த மாகாணத்தைச் சேர்ந்தவரை...

செல்போனுக்காக உயிரை விட்ட நண்பர்கள் : அமெரிக்காவில் நடந்த பரிதாபம்!!

அமெரிக்காவின் பல பகுதிகளில் கடுமையான பனி பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளின் நீர் உறைந்துப்போய் பனிக்கட்டியாக மாறும் பதத்தில் உள்ளது. இந்நிலையில், அங்குள்ள சிக்காக்கோ ஆற்றங்கரை ஓரமாக மூன்று நண்பர்கள் நடந்து சென்றுக்...

நடு வீதியில் குளித்து ஆசிரியை நூதன போராட்டம்!!

பாதை சேதமடைந்துள்ளது என்பதை உணர்த்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ஆசிரியை ரோசி மோர்சன் வித்தியாசமான போராட்டம் ஒன்றை மேற்கொண்டார். இவர் சமீபத்தில் சமுதாய சேவை பணிக்காக தென்னாபிரிக்காவுக்கு சென்றார். அப்போது அவர் பயணம் செய்த...

பொலிஸ் வாகனம் மீது ஏறி குதித்த ராகுல் காந்திக்கு சிக்கல்!!

பொலிஸ் வாகனம் மீது ஏறிக் குதித்த காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேரள பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி கடந்த...

இந்தியாவிற்கு தங்கம் கடத்த முயன்ற மூவர் கைது!!

சட்டவிரோதமான முறையில் தங்கம் கடத்த முயன்ற மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நியா செல்ல இருந்த இருவர் இன்று அதிகாலை விமான நிலைய சுங்கப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் இருந்து 750...

சர்வதேச பொலிஸார் தேடும் தமிழர் பொலிஸ் நிலையம் சென்று மாட்டிக்கொண்டார்!!

பயங்கரவாத குற்றச்சாட்டில் சர்வதேச பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ள தமிழர் ஒருவர் பிரான்ஸில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரான்ஸின் - பெரிஸில் உள்ள பொலிஸ் நிலையமொன்றுக்கு முறைப்பாடு ஒன்றை பதிவு செய்யச் சென்ற வேளை குறித்த நபர் கைது...

வடக்கில் களையிழந்த தைப்பொங்கல்!!

இலங்கையின் வடபகுதியில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக தைப்பொங்கல் பெரிய அளவில் சோபிக்கவில்லை. எனினும் நாட்டின் பல பகுதிகளிலும் பொங்கல் விமரிசையாகக் கொண்டாடப்பட்டிருக்கின்றது. ஆலயங்களில் விசேட பொங்கல் மற்றம் வழிபாடுகள் என்பன நடைபெற்றிருக்கின்றன. மன்னார் புனித...

வவுனியா திருநாவற்குளம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணின் சடலம் மீட்பு!!

வவுனியா - திருநாவற்குளம் 3 ஆம் ஒழுங்கை பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர். தையலகம் ஒன்றினை நடத்திவரும் 56 வயதுடைய இராமன் விஜயகுமாரன் என்பவரே தனது...

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சலா : உடன் வைத்தியசாலைக்கு செல்லுங்கள் : சுகாதார அமைச்சு!!

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் நீடிக்குமாயின் நோயாளியை சிகிச்சைக்காக அரச வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது. காய்ச்சல் வரும்போது எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வலி நிவாரணி மாத்திரைகளை பெற்றுக் கொள்ள வேண்டாம் என...

உலக முடிவில் விழுந்த இளைஞனின் வாழ்வு முடிவு!!

உடுதும்பர, நவதகல பிரதேசத்தில் சிறிய உலக முடிவு என அழைக்கப்படும் மலையில் இருந்து கீழே விழுந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இச்சம்பவம் நேற்று (14) காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நவதகல, ஹுன்னஸ்கிரிய...

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல்!!(படங்கள்)

வட மாகாணசபையின் முதலாது தமிழ் தைப்பொங்கல் கைதடியிலுள்ள பேரவைக்கட்டிடத்தினில் நேற்று காலை நடைபெற்றிருந்தது. பேரவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மற்றும் பணியாளர்கள் சகிதம் பொங்கல் நிகழ்வு இடம்பெற்றிருந்தது.பேரவையின் முகப்பு வாசலில் பொங்கல் பொங்கி பிரார்த்தனையும் இடம்பெற்றிருந்தது.