வவுனியா செய்திகள்

வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்திகளைப் பெற்று சாதனை!!

இன்று வெளியாகியுள்ள கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளின் படி வவுனியா சைவப்பிரகாச மகளீர் கல்லூரியில் மூன்று மாணவர்கள் 9A சித்தியினைப் பெற்றுள்ளனர். சங்கவி மோகன், வராகி வாகீசன், சங்கவி கனகரத்தினம்...

வவுனியா மாவட்ட செயலகம், பிரதேச செயலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்!!

  அரசினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 10 இலட்சம் தொழில் முயற்சியாளர்களை உருவாக்குவதற்கான சுயசக்தி கடன் விண்ணப்பத்தை கையளிப்பதற்காக வவுனியா மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களில் மக்கள் காலை முதல் முண்டியடித்துக் கொண்டு நிற்பதை காணமுடிகின்றது. பிரதமர் ரணில்...

வவுனியாவில் மாபெரும் டெங்கு ஒழிப்பு செயற்றிட்டம்!!

  வவுனியா பொலிஸ், சிவில் பாதுகாப்பு பிரிவு, விசேட அதிரடிப்படையினர் மற்றும் சுகாதார திணைக்களம் ஆகியன இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டத்தினை முன்னெடுத்துள்ளன. வவுனியா நகரசபை மைதானத்தில் இன்று (27.03.2017) காலை இடம்பெற்ற டெங்கு ஒழிப்பு...

வவுனியாவில் வெளிச்சம் அறக்கட்டளையின் 1ம் ஆண்டு பூர்த்தியும் கெளரவிப்பும்!!

  வெளிச்சம் அறக்கட்டளையின் நெடும் பயணத்தில் பங்குகொண்டிருந்த மற்றும் பங்குகொண்டிருக்கும் அன்பளிப்பாளர்கள், பயனாளிகள் மற்றும் ஆர்வலர்களை கெளரவிக்கும் நிகழ்வு தலைவர் பா.லம்போதரன் தலைமையில் நேற்று (26.03.2017) இலங்கைச் செஞ்சிலுவைச் சங்க மண்டபத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில்...

வவுனியாவில் அரச ஊழியர்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்!!

ஓமந்தை அரச ஊழியர் வீட்டுத்திட்டபகுதியில் காணிகள் பெற்றுக்கொண்டு இதுவரை வீடுகள் கட்டாத 190 சிற்றூழியர்களுக்கு 5 இலட்சம் ரூபா மானியம் வழங்கப்படவுள்ளதால் தத்தமது காணிகளை துப்பரவு செய்து எதிர்வரும் 5ம் திகதிக்கு முன்...

வவுனியாவில் ஒரு மாதத்தைக் கடந்து 32வது நாளாக தொடரும் போராட்டம்!!

  வவுனியாவில் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சுழற்சி முறையில் இன்று (27.03.2017) 32வது நாளாகவும் தமது உணவு தவிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர். காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக தீர்க்கமான முடிவை தெரிவிக்க வேண்டும், அரசியல்...

வவுனியா கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் கொடியேற்றம்!(படங்கள்,வீடியோ)

இலங்கையின் ஆறாவது ஈஸ்வர தலமாக விளங்குகின்ற அகிலாண்டேஸ்வரத்தில் அதாவது இலங்கையின் வடக்கே வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள கோவில்குளம் அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத அகிலாண்டேஸ்வரர் திருக்கோவிலின் வருடாந்தமகோற்சவத்தின் சிவன் உற்சவம்நேற்று 26-03-2017 ஞாயிற்றுக்கிழமை...

வவுனியா சிவபுரம் பெரியார் முன்பள்ளியின் மழலைகள் விளையாட்டு விழா -2017

பெரியார் முன்பள்ளியினது மழலைகளின் விளையாட்டு விழா 2017 நேற்று (25.03.2017) அன்று இடம்பெற்றது. இவ் முன்பள்ளியில் மன்னார் வீதியில் அமைந்துள்ள சிவபுரம் மற்றும் கிச்சிராபுரம் ஆகிய இரு கிராமங்களினைச் சேர்ந்த சிறார்களும் கல்வி...

வவுனியாவில் மாடு கடத்திய ஒருவர் கைது!!

வவுனியா - செட்டிக்குளத்தில் கடந்த 28 திகதி பட்டியில் கட்டி விடப்பட்ட மாட்டை காணவில்லை என செட்டிக்குளம் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. குறித்த முறைப்பாட்டின் பெயரில் விசாரணைகளை மேற்கொண்ட செட்டிக்குளம் பொலிஸார் நேற்று...

வவுனியாவில் சிறைச்சாலை கைதி வைத்தியசாலையில் மரணம்!!

வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த சிறைச்சாலை கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கடந்த 8 ஆம் திகதி வவுனியா பசார் வீதியில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் ஒன்றினை உடைத்து களவாட முயன்ற...

வவுனியாவில் 33வது விளையாட்டு விழாவுக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன!!

வவுனியா கலைமகள் விளையாட்டுக்கழகமும் கலைமகள் சனசமூக நிலையமும் இணைந்து நடாத்தும் 33வது வருட சித்திரை புத்தாண்டு விளையாட்டுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் 14ம் திகதி சித்திரை வருடப்பிறப்பன்று விளையாட்டுவிழா நடைபெறவுள்ளது. இவ் விளையாட்டுப்போட்டியில் 10 வயதுக்குட்பட்ட...

வவுனியாவில் தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டத்தில் வெற்றிபெற்ற மாணவிக்கு துவிச்சக்கரவண்டி!!

  தேசிய ரீதியில் சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்கு பற்றி மூன்றாமிடம் பெற்ற பாலச்சந்திரன் தர்சிகா என்ற மாணவிக்கு புலமபெயர் தமிழரின் நிதியளிப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தானால் துவிச்சக்கரவண்டி வழங்கப்பட்டது. வவுனியா மாவட்டத்தை சேர்ந்த பா.தர்சிகா...

வவுனியா கோவில்குஞ்சுக்குளம் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கி வைப்பு!!

  டேவிட் பீரிஸ் மோட்டோர்ஸ் கம்பனியால் வவுனியா கோவில்குஞ்சுக்குளம் அ.த.க பாடசாலையை சேர்ந்த 59 மாணவர்களுக்கு பாதணி வழங்கும் வைபவம் கோவில்குஞ்சுக்குளம் அத.க பாடசாலை அதிபர் சு.முகுந்தன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு பிரதமவிருந்தினராக முன்னாள் கோவில்குஞ்சுக்குளம்...

வவுனியா போராட்டத்திற்கு தென்பகுதி இலங்கை ஆசிரியர்கள் சங்கம் ஆதரவு!!

  வவுனியாவில் காணாமற்போன உறவுகளினால் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டம் இன்று 31வது நாளாகத் தொடர்கின்றது. வவுனியா A9 வீதியில் வவுனியா அஞ்சல் திணைக்களத்திற்கு அருகாமையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் இன்றுடன்...

வவுனியாவில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்த சிரமதானம்!!

  வவுனியா நகரத்தில் டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக மகாறம்பைக்குளம் கிரமசேவகர் பிரிவுக்குட்பட்ட மதினா நகர் பகுதியில் இன்று (26.03) மதினாநகர் பள்ளிவாசல் தலைவர் அ.முகமட் பைசர் தலைமையில் சிரமதானப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது. மதினாநகர்...

வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகளை செய்துதரக்கோரி ஆர்ப்பாட்டம்!!

  வவுனியா ஓமந்தை அரச வீட்டுத்திட்ட மக்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி இன்று (26.03.2017) காலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுனியாவில் அரச உத்தியோகத்தர்களாக பணிபுரிவோருக்கு வதிவிடங்களை அமைப்பதற்காக ஓமந்தை பகுதியில் கடந்த 5 வருடங்களுக்கு...