வன்னி மண் : எங்கள் தாய் மண்!!

வன்னியன் வலிமை வாழ்ந்து வரலாறு படைத்த மண். நூற்றாண்டு அடிமை கொண்ட வெள்ளையரிடம் அடங்காது சினங்கொண்டு எழுந்த மண். புகழ் பண்டாரவன்னியனை கற்சிலையில் பொற்சிலையாய் பெற்றெடுத்து வரலாறு கண்ட மண். கொரில்லாப் போர் புகழ் வன்னியரே என வெள்ளையனின் வரலாற்றிலும் நிமிர்ந்த மண். பின்னாலில் வரலாற்றிலும் அதனைப் பறைசாற்றிய மண். காடென்றும்...

ஒத்தையிலே நிற்கிறியே..

மங்கல நாண் பூட்டி மதியொளி அழகு காட்டி நெஞ்சுக்குள் குளிர்ந்தவனை நெருப்பாற்றில் தொலைத்தாயோ. புறநானூற்று வீரனம்மா. புறமுதுகு காட்டவில்லை. சதி வலையில் சிக்க வைத்தே சிறைபிடித்துப் போனாரம்மா. எண் பத்து ஆயிரமம்மா யுத்தத்தில் விதவைகள் நெருப்பாற்றின் வரலாறுகளம்மா. கற்பாலே ஊர் எரித்த கண்ணகியின் கோயிலிலே தீச்சட்டி ஏந்தியவளே உன் நெஞ்சத்து நெருப்பதனை பெண் தெய்வம்...

கண்ணே என் கண்மணியே..

கண்ணே என் கண்மணியே. காதல் பெற்ற தவக்கொழுந்தே. உயிரே உயிர் ஒளியே. உயிரில் பூத்த பூந்தளிரே. தத்தி நீ நடக்கையிலே தாவி நானும் அணைத்திடனும். தித்திக்கும் பேச்சினிலே பொழுதெல்லாம் மறந்திடனும். உன் உதட்டோர எச்சியிலே என் கன்னம் நனைத்திடனும். பொக்கை வாய்ச் சிரிப்பினிலே பொன்னூஞ்சல் ஆடிடனும். கண்கள் எனைப் பார்க்கையிலே குழந்தையாய்...

வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நூல்கள் வெளியீட்டு விழா : ஒரு பார்வை!!

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 04.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 01.தவறுகள் தொடர்கின்றன - கைக்கூ வடிவம் 02.சீதைக்கோர் இராமன் - கவிதை 03.அனாதை எனப்படுவோன் - நாவல் 04.வீடுகளில் மின்சக்தி...

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செவ்வரத்தை’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா தமிழ்ச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்   06.09.2015  ஞாயிற்றுக்கிழமைஅன்று 'யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்' தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் நடத்திய...

என் தேசத்தைப் பற்றி – மித்யா கானவி!!

என்னடி தோழி எப்படி சுகம்? சிட்டுக் குருவி இசை மறந்த எம் தேசத்தைப்பற்றி என்னத்தை சொல்ல -நான் துருப்பிடித்த துப்பாக்கிகள் எல்லைதாண்டியே வருவதால் சத்தமின்றி கொல்லும் சுவாச நோய் பற்றி... வாகை மரங்கள் உதிரும் கண்ணீரில் அரசமரங்கள் உயிர்ப்பித்தல் பற்றி-எப்படி சொல்ல நான்.. வற்றிப் போகாத வரட்டுப் பிடியில் ஒற்றை காலில் நிற்கும் கொக்கை-பார்த்து வெக்கிப் போகும் தூரோகத்தை பற்றி எப்படிச் சொல்லுவேன்.. செம் பருந்தை...

வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

பட்ட மரத்தடியில் ஓர் பருவக் குழந்தை!!

வெள்ளிக் கோலங்களால் விடிந்து கிடந்தது உறவுகளின் முற்றம்... என் மன முற்றம் மட்டும் இருண்டு கிடந்தது ஏனோ? எத்தனை வயது வரை என்னைத் தூக்கிச் சுமந்திருப்பாய்.. தாயின் மார்க்காம்பு சப்பலை விட உன் உப்பு விரல்க் காம்பு சப்பி சுகம் கண்ட பிள்ளையல்லவா நான்.. மயிலிறகு கனவு...

உலகம் மாறிப் போகுதையா!!

குடிதண்ணிக்காய் உயிர் தவிக்கும் உடலுள்ளே தண்ணியும் குடலரிக்கும் அடுப்பிலே பூனையும் படுத்திருக்கும் அநியாய வட்டியில் குடி தொடரும்-பணம்.. கொடுத்தவன் உறுதியை அறுதியென்பான்-இவன் தொங்கிட கோவணம் இல்லையென்பான் தின செய்திகள் தலைப்பெல்லாம் தற்கொலைகள் திடுக்கிடும் தகவல்கள் வேதனைகள் பாவிகள் செய்திடும் வன்செயல்கள்.. ஆவியாகினும் அடங்கிடா தறுதலைகள் முறையற்ற உறவுகள்...

வவுனியாவில் வெளியிடப்பட்ட கவிஞர் முல்லைத்தீபன் அவர்களின் “கடவுளிடம் சில கேள்விகள்” கவிதை நூலுக்கான ரசனைக்குறிப்பு : தலவாக்கலை றாஜ்சுகா!!

முல்லை மண்ணிலிருந்து நல்ல கவிதை நூலொன்றினை தழுவும் சந்தர்ப்பம் நம் ரசனைக்கண்களுக்கு கிடைத்துள்ளது. தீபன் என்ற கவிஞர் தன் மண்ணின்மீதுள்ள பற்று அன்பின் காரணமாக 'முல்லைத்தீபன்' என்ற பெயருடன் இலக்கியத்தளத்தில் இயங்கிக்கொண்டிருக்கின்றார். கல்விச்சூழலில் வளர்ந்த...

இரு இளம் மருத்துவர்கள் பிரசவித்த”இருளைப் படைத்தல்” கவிதை நூல் – ஓர் பார்வை!!

மருத்துவ உலகின் முத்துக்கள் இரண்டு சேர்ந்து இலக்கியச் சிற்பிக்குள்ளிருந்து அண்மையில் வெகுண்டெழுந்திருக்கின்றன. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டோரால் வெளியிடப்பட்டிருக்கிறது. செ.மதுரகன், பா.திலீபன் இணைந்து வவு/தமிழ் மாமன்றத்தினூடாக இப்படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உலகிற்கே ஒளி தரும் மருத்துவர்களால் இருள்...

உணர்வுகளுக்காக ஒரு கவிதை..!!

  உணர்வுகளுக்காக ஒரு கவிதை - சொந்த மண்ணை விடு சென்ற உறவுகளுக்காய் என் " சமர்ப்பணம்" அன்னையின் பிரசவத்தில் பிறந்தேன் - ஆனால் உன் ஆசை முத்தங்களுடன் தவழ்ந்தேன் . கட்டிழமைம்பருவத்தை அடைந்தேன் - மனதில் கவலை ஏதுமின்றி சுற்றித் திரிந்தேன்... ஆண்டுகள்...

கவிதைப் பூ..

ஒரு நாள் எனது கிறுக்கள்களை படித்து முடித்ததும்... உனக்கு பிடித்த கவிதை எது என்று என்னை கேட்டாய்... என் வாழ்க்கை என்றேன்.. உடனே கோபமாய் ஓர் பார்வை பார்த்து ஒன்றும் புரியாதவளாய்... நான் கவிதையை கேட்டேன் என்றாய்... உன்னால் எழுதப்பட்ட கவிதை என் வாழ்க்கைதானே என்றேன்... உடனே என்னை பார்க்க பிடிக்காதவள் போல் திரும்பி நின்று வெட்கப் பூ பூத்தாய்... எனது வாழ்க்கையில் இன்னுமொரு கவிதை பூ பூத்தது... -இராஜ சேகர்-

சூரியன் விழுகின்ற கடலினில்..

சூரியன் விழுகின்ற கடலினில் என்னை நனைய விடு..! விரிகின்ற வெளிகளில் தனிமையின்... கவிதையை படிக்க விடு..! மழை பொழிகின்ற வேளையினில் மரங்களின்... வேர்களாய் மகிழ விடு..! ஒளிர்கின்ற மெழுகினில் உன் பிரிதலின்... வலியினை கருக விடு..! அலைமோதும் ஓசையினில் உரிமையாய்... எனதன்பினை எடுத்து விடு..! தினம் விடிகின்ற...

தொடரும் அவலங்கள்..

அவலங்கள் நடந்தேறுவதை கண்டும் அவலம் ஒன்று இடம்பெறபோவதை அறிந்தும் அங்கிருந்து தலைதெறிக்க அவசர அவசரமாய் தப்பி ஓடுவதும் - பின் "விசாரணை" "போர்க்குற்றம்" "மனித உரிமை மீறல் " என்று உலக நாடுகள் முன் நற்பெயருக்கு முனைவதும் உண்மை நிலைகளை கண்டறியும் "உத்தியோக பூர்வ...