செப்டம்பர் மாத ராசி பலன்கள் – விருச்சிகம்!!

448

viruchikam

“தேளான் மறவான்’’ என்பதற்கேற்ப யாரேனும் தீங்கு செய்து விட்டால் அதனை ஒருபோதும் மறக்காத குணமும் அதே வேளையில் மன்னிக்கும் குணமும் கொண்ட விருச்சிக ராசி வாசகர்களே தனஸ்தானத்தின் மீது ராசிநாதன் செவ்வாய், குரு பார்வை இருப்பதால் மிகுந்த அனுகூலமான பலன்களை பெறுவீர்கள்.

ஏழரைச் சனியால் வீண்கலகமும் அலைச்சலும் இருக்கும், இருப்பினும் குருவின் பார்வை விரய சனி மீது விழுவதால் காரிய அனுகூலமும் நற்சுகமும் பொருளாதார மேம்பாடும் உண்டாகும். நன்மைகள் கிடைக்கும். மதிப்பு மரியாதை கூடி செல்வாக்கு அதிகரிக்கும்.

தைரிய வீர்ய ஸ்தானத்தை பார்க்கும் ராசிநாதனின் பலத்தால் தடைகளை முறியடித்து காரிய வெற்றி காணலாம். குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் பெருகும். கணவன்-மனைவி இடையே அன்பும் பாசமும் பெருகும். திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகள் இனிதே நடக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். உடல்நலனைப் பொறுத்த வரை சளி மற்றும் மார்புத் தொல்லை வரலாம்.

உத்யோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். கோரிக்கைகள், ஒப்பந்தங்கள் நிறைவேறும். உடன்பணி செய்வோர், மேலதிகாரிகள் ஆகியோரிடம் மிகுந்த நல்ல பெயர் ஏற்படும். சம்பள உயர்வு கிடைக்கும்.

சிலருக்கு பதவி உயர்வு கிடைக்கும். தொழில் செய்வோருக்கு கடந்த காலத்தைவிட வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். லாபம் கூடும். புதிய தொழிலால் அனுகூலம் ஏற்படும். பெண்கள் பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள்.

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்களால் பொருளாதார லாபம் கிடைக்கும். மாணவர்களுக்கு அனுகூலமான போக்கே காணப்படுகிறது. நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சிறப்படைய மிகுந்த முயற்சி தேவை. வழக்கு விவகாரங்கள் சாதகமாக முடியும்.

பரிகாரம் : செவ்வாய்தோறும் அம்மனுக்கு நல்லெண்ணெய், நெய் கலந்து விளக்கு ஏற்றவும்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீகார்த்திகேயாய நமஹ” என்ற மந்திரத்தை தினமும் 11 முறை கூறவும்.

சிறப்பு பரிகாரம் : சஷ்டி தோறும் முருகனுக்கு பாலபிஷேகமும் சிவப்பு நிற பூக்களால் அர்ச்சனையும் செய்யவும்.

சந்திராஷ்டம தினங்கள் : 1, 26, 27, 28 ஆகிய திகதிகளில் எதிலும் நிதானம் தேவை.

அதிர்ஷ்ட கிழமைகள் :

வளர்பிறை : ஞாயிறு, செவ்வாய், வியாழன்.
தேய்பிறை : ஞாயிறு, வியாழன்.