வவுனியா செய்திகள்

வவுனியாவில் புகையிரதம் மோதி இளைஞர் பலி : பொலிசார் விசாரணை!!

வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற சோகமான தொடரூந்து விபத்தில் 23 வயதுடைய இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தொடரூந்துடன் மோதியதாலேயே இவ்விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் உயிரிழந்தவர்...

வவுனியா ஓமந்தையில் புத்தர் சிலை அமைத்து காணி ஆக்கிரமிப்பு முயற்சி? எம்பி கஜேந்திரகுமார் பொன்னம்பலம் நேரில் கள ஆய்வு!!

வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் புத்தர் சிலை ஒன்றை அமைத்து, அக்காணியை சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இது தொடர்பான அவசர முறைப்பாடு தமிழ் தேசிய...

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளை : ஐவர் கைது!!

வவுனியாவில் வீடு உடைத்து 51 வயது பெண் ஒருவரை கூட்டு துஸ்பிரயோகம் செய்து கொள்ளைச் சம்பவத்தில்ஈடுபட்ட ஐவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களும் பொலிசாரால் கைப்பற்றப்பட்டது. கடந்த 8 ஆம் திகதி வவுனியா, மடுகந்தை,...

வவுனியாவில் வீடு புகுந்து பெண் கூட்டு வன்புணர்வு மற்றும் கொள்ளை : இருவர் கைது : கோடிக்கணக்கான சொத்துக்கள்...

வவுனியா - மடுகந்தை, மயிலங்குளம் பகுதியில் வீடு புகுந்து 51 வயதுடைய பெண் ஒருவரை கூட்டு வன்புணர்வு செய்து, பெருமளவான சொத்துக்களைக் கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை வவுனியா குற்றத்தடுப்புப் பிரிவு பொலிசார்...

வவுனியாவில் பிரதேச சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு!!

வவுனியா வெங்கலசெட்டிக்குளம் பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான போசாக்கு உணவுப் பொதிகள் வழங்கும் சிறப்புத் திட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் சபையின் செயலாளர் ஆகியோரின் இணைத்...

வவுனியாவில் டிப்பரும் முச்சக்கரவண்டியும் மோதியதில் ஒருவர் பலி!!

வவுனியா சூடுவெந்தபிலவிற்கு அண்மித்த பகுதியில் இன்று (12.08.2026) மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியாவில் இருந்து சென்றுகொண்டிருந்த டிப்பர் வாகனம் சூடுவெந்தபிலவு பகுதியில் சென்றுகொண்டிருந்த போது எதிரே வந்துகொண்டிருந்த முச்சக்கர...

IDM Nations Campus International வவுனியா வளாக மாணவர்களின் வரலாற்றுச் சாதனை!!

வவுனியாவில் இயங்கி வரும் IDM Nations Campus International – வட கிழக்கு பிராந்திய வளாகத்தில் சட்டக் கல்வியைப் பயின்ற மாணவர்கள், இலங்கை சட்டக் கல்லூரியின் (Sri Lanka Law College) இறுதியாண்டு...

வவுனியா குட்செட் வீதியில் மாபெரும் தூய்மைப் பணி!!

“தூய்மையான தேசத்திற்கான தேசிய மக்கள் பணி” வேலைத்திட்டத்தின் கீழ், 214D வைரவப்புளியங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட குட்செட் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட மாபெரும் சிரமதானப் பணி வெற்றிகரமாக நிறைவடைந்தது. சுமார் 6 மணி...

வவுனியாவில் நண்பனின் 11 வயது மகளை துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கிய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை!!

நண்பனின் 11 வயது மகளை தவறான நடத்தைக்கு உட்படுத்திய நபருக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா தீர்ப்பளித்துள்ளார். இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட...

வவுனியாவில் ‘அத்தம’ தேசிய தூய்மை தினத் திட்டம் தொடக்கம் : மக்கள் பிரதிநிதிகள், இராணுவத்தினர் பங்கேற்பு!!

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நல்லிணக்கம் மற்றும் தூய்மையான தேசத்தை உருவாக்கும் நோக்கில் முன்னெடுக்கப்படும் ‘அத்தம’ (Attama) தேசிய தூய்மை தினத் திட்டம் இன்று (08.08.2026) வவுனியா நகரத்தை மையமாகக் கொண்டு சிறப்பாக ஆரம்பித்து...

வவுனியா மாநகர முதல்வர் பதவி நீக்கம் : இடைக்காலத் தடை செப்டம்பர் 9 வரை நீடிப்பு : மேல்...

வவுனியா மாநகர முதல்வரை பதவி நீக்கம் செய்து ஆளுநர் எடுத்த தீர்மானத்திற்கு எதிராக விதிக்கப்பட்ட இடைக்காலத் தடைக் கட்டளையை எதிர்வரும் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி வரை நீடித்து வவுனியா மேல்...

வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் உடலை அடக்கம் செய்ய அனுமதி மறுப்பு : பொலிசில் முறைப்பாடு!!

வவுனியா இறம்பைக்குளம் சேமக்காலையில் மரணமடைந்த ஒருவரின் உடலை அடக்கம் செய்வதற்கு இறம்பைக்குளம் புனித அந்தோனியார் ஆலய நிர்வாகம் அனுமதி மறுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் குற்றம் சுமத்தியுள்ளனர். கடந்த ஆகஸ்ட் 2ஆம் திகதி மரணமடைந்த தமது...

வவுனியா ஏ9 வீதியில் டிப்பர் கொள்கலன் மோதி விபத்து!!

வவுனியா, ஏ9 வீதி புளியங்குளம் பகுதியில் இன்று (05.08.2026) மாலை டிப்பர் வாகனமும் கொள்கலன் (Container) ஒன்றும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன. குறித்த இரண்டு வாகனங்களும் புளியங்குளம் பகுதியில் வைத்து ஒன்றோடொன்று மோதிக்கொண்டுள்ளன. இந்த விபத்தின்...

வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திய பிரபல பேருந்தின் உரிமையாளர் கைது : சாரதி ஐஸ் போதைப்பொருள் பயன்படுத்தியமை அம்பலம்!!

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்து தொடர்பில், பிரபல பேருந்தின் உரிமையாளர் நேற்று (04.08.2026) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது...

வவுனியா தாஸ்கோட்டம் குழந்தை இயேசு முன்பள்ளியின் மழலைகள் மகிழ்களம் – 2026!!

வவுனியா தாஸ்கோட்டம் குழந்தை இயேசு முன்பள்ளியின் "மழலைகள் மகிழ்களம் - 2026" சிறுவர் விளையாட்டு விழா குழந்தை இயேசு ஆலய முற்றத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. வேப்பங்குளம் பங்குத்தந்தை டெஸ்மன் ஆஞ்சலோ தலைமையில் நடைபெற்ற...

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலய 110வது ஆண்டு நிறைவு விழா!!

வவுனியா செட்டிகுளம் மகாவித்தியாலயம் தனது 110ஆவது ஆண்டு நிறைவு விழாவை இன்றையதினம் (03.08.2026) பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக கொண்டாடியது. பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் ஏற்ப்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் விசேடமாக 110ஆவது ஆண்டுநிறைவை நினைவுகூரும்...