கொரோனா காலமும் கிரக மாற்றமும் : ஒரு இளைஞனின் எண்ணத்திலிருந்து!!

நாளாந்த பத்திரிகைகளை நாள் தோறும் புரட்டும் வேலையினையே கிரமமாக செய்து வருகிறேன். நாட்டு நிலமையையும் வீட்டு நிலமையையும் கருத்திற்கொண்டே நான் மைதானத்திற்கு வருகை தருவதில்லை என்பதை ஒருவரேனும் புரியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன். அதுமட்டுமல்லாது,...

வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது. நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம்.. தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்.... கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் -...

சிறகிழந்த பறவைகள்..!!

எதிரி சண்டையிட்டும் வீழ்த்த முடியாத கர்வம் மிகுந்த வீரப் பறவைகள். வேடன் இட்ட சதி வலையில், சிறகுகள் வெட்டப்பட்டு வேடன் வகுத்த தனி வழியில் குவியல் குவியலாக இறக்கை வேறு உடல் வேறு முண்டம் வேறு பிண்டம் வேறாக பாதை எங்கும் கண் பெற்ற...

வரலாற்றில் அழியா மே 18!!

எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள் குஞ்சுகளை சுமந்து குலங்காக்க குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள் நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது இன்று அகவை ஏழாச்சு அன்று இருந்த நிலையிலேயெ நாமின்றும்.. இழந்த எம்உறவுகளை...

வாழ்க்கை வரமா பாரமா?

வாழ்வதற்காய் பிறந்தவர்கள் நாம் உயர்வாய் வாழ்வின் பொருள்ளுணர்ந்து வாழ்தல் வேண்டும். வீழ்வதெல்லாம் வெற்றியின்முதல் படியாக எண்ணி வீழ்ந்தே கிடந்திடாமல் எழுதல் நன்றே. ஏழ்மை நிலை வந்தெம்மை வாட்டினாலும் எளிமைகாத்து பொறுமையுடன் வாழ வேண்டும். தேடியவர் செல்வம் செல்லும் போது தேகமதன் உயிர் பிரிவைத்...

தாய்மையது போற்றிடுவோம்..

தாய்மையது போற்றிடுவோம் நாளும்- பெண் தவமது என்றிடுவோம் மீளும்- கண் தாய்மையவள் மென்மையவள் தூய்மையவள் பெண்மையவள் தேற்று உயர்வு ஏற்று. வாய்மையது தன்னுதிரம் தந்து -மண் வாழ்வளித்த தெய்வமவள் நொந்து -என் வரமென்றும் உரமென்றும் தரமென்றும் கரமென்றும் வார்த்தாள் என் ஆத்தாள். -குமுதினி ரமணன்-

மரம் பேசுகிறேன்..

பூமித்தாயின் மடியில் உயிர் முட்டி வந்தேன். சூரியனின் ஒளிபட்டுபச்சையமும் கொண்டேன். உயிரினங்கள் வாழ்வோடுஉறவாக நின்றேன். பிராணவாயு தூய்மையாக உமக்களித்து மகிழ்ந்தேன். எனைமறந்து நகரமயம், நாகரீகம் விவேகமற்ற விபத்தே. போதிமரப்புத்தனும் என் மடியில் அமர்ந்தே இருந்த இடத்தில் ஞானம் பெற்றே மூவுலகம் வென்றான். ஆதி...

உழைப்பாளிகள் தினம்..

சித்தமதை தினம் உழைப்பில் தந்தவரை சிந்தையிலே கொள்ளும் ஓர் நாளாம். நித்தமவர் உடல் வருத்தி பிறர் வாழ நித்திரை, பசி மறந்து உழைத்தார். முத்தமிட்டு அவர்கரங்கள் உயர்வாய் முத்தமிழால் போற்றிடுவோம்எந்நாளும். வறுமையது வாழ்வாகி நாளும் துன்பம் வளமின்றி பசியால் உழல்தல் நன்றோ. சிறுமையது பணம்...

ஓடி விளையாடு பாப்பா

வீதியில் விளையாட்டு இன்பான காற்றோடு. சுவாசத்தில் ஒரு பாட்டு துள்ளலான மெட்டோடு. ஓடிக் களைத்திடினும் உற்சாகமான விளையாட்டு. கணனியில் கண்ணயர்ந்து காணமல் போவதை நீ மாற்று. ஓடிப்பிடித்து சுதந்திரமாய் ஒளிந்து நீயும் விளையாடு. தேடி நட்பு நாடி வரும். தேகப்பயிற்சி கூடி வரும். பாடப்படிப்பு முடிந்தவுடன் பம்பரமாய் சுழன்றாடு. கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும் களிப்பு தரும்...

என் கண்ணன் வரும் நேரம்..

விண் மீன்கள் வழி பார்த்து கடல் மீன்கள் வளம் பார்த்து என் கண் மீன்கள் துயர் தீர வரும் நேரம் தோழி என் கண்ணன் வரும் நேரம் தோழி. ஊர் உறங்கும் சாமத்தில் என் கண் உறங்கா ஏக்கத்தில்...

ஒற்றைப் பனை

ஒற்றைப் பனை நீ ஒராயிரம் கவிதை நீ. தட்டத்தனியே தவிப்பாய் என் கண்களில் நீரை நிறைக்கிறாய். மண் ஆண்ட உறவுகள் மனம் ஆண்ட வாசனையில் நிறைகிறாய். முன்னோர் எழுதிய அரிச்சுவடியில் நீ. புறாவைத் தூது அனுப்பும் கவியிலும் நீ. என் பாட்டன் எல்லைக்குள் வேலி...

எனக்குள் உலகம்..

அமைதியும் மௌனமும் உலகின் அழகிய விழிகளாகலாம். தூய்மையும் சுவாசமும் பிராண வாயுவாகலாம். ஒற்றைக்கல் தீப ஒளி அகல் விளக்காகலாம். இயற்கையின் பச்சையில் இனிமை காணலாம். தெளிந்த நீர் போல் கண்ணாடியாய் மனதைக் காணலாம். எனக்குள் உலகம். எனக்கேன் உலகம். -குமுதினி ரமணன்-

குழந்தையின் வலி

வாழ்க்கை அடித்த வலியிலே குழந்தை நீயும் அழுகிறாய். கேள்வி கேட்க தெரியவில்லை. தேம்பி நீயும் அழுகிறாய். அம்மா என்ற ஒரு சொல்லில் இருண்டு விட்டது உலகமே. அப்பா என்ற மறு சொல்லில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. விதிவழி போகிறாய். விடியல் காண ஏங்கிறாய். சண்டை அற்ற...

காகிதப்பூ

மலரும் மலர்கள் யாவும் பெண்ணவள் வண்ணம். மணம் கொள்ளா மலர் நீ யார் செய்த பாவம். மனம் கொண்ட மனிதரும் பணம் கொண்டே பாசம். பெண் மலர் உன் சீர் தனம் காணா, மண் மகள் கேட்பாள் சீதனம். உன்னை ஈன்ற தாயவள் மகிழ்வு உனக்கில்லை....

மண்வாசனை..

  தாயின் உதிரம் கருவாகி பேச்சும் மூச்சும் உருவாகி கலந்த காற்றில் கனிந்தமர்ந்த நன்றி நினைவதில் மண்வாசனை. தத்தித் தவழ்ந்து நடை பழகி பால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய் கொஞ்சும் மொழி கதை பேசி வாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது. வேப்பமரத்து நிழல் இருந்து கூட்டாஞ்சோறு நாம்...

புரிந்துணர்வு..

வான், கடலைப் புரிந்ததால் மழை நீரானது மண், வித்தை புரிந்ததால் விளைச்சலானது கதிரவன், ஒளியைப் புரிந்ததால் பசுமையானது இருள், நிலவைப் புரிந்ததால் பௌர்ணமியானது நான், உன்னைப் புரிந்ததால் உனக்கேயானேன் நீ, என்னைப் புரிந்தால் நாமாய் ஆனோம் உண்மை, வாய்மை புரிந்ததால் சத்தியமானது நியாயம்,...