பட்ட மரத்தடியில் ஓர் பருவக் குழந்தை!!

வெள்ளிக் கோலங்களால் விடிந்து கிடந்தது உறவுகளின் முற்றம்... என் மன முற்றம் மட்டும் இருண்டு கிடந்தது ஏனோ? எத்தனை வயது வரை என்னைத் தூக்கிச் சுமந்திருப்பாய்.. தாயின் மார்க்காம்பு சப்பலை விட உன் உப்பு விரல்க் காம்பு சப்பி சுகம் கண்ட பிள்ளையல்லவா நான்.. மயிலிறகு கனவு...

வவுனியா தமிழ்ச்சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற செவ்வரத்தை’ சிறுகதை நூல் வெளியீட்டு விழா!(படங்கள்)

வவுனியா வைரவபுளியங்குளம் ஆதிவிநாயகர் ஆலயத்தின் பாலாம்பிகை மண்டபத்தில் வவுனியா தமிழ்ச்சங்கத்தினரின் ஏற்பாட்டில் நேற்றைய தினம்   06.09.2015  ஞாயிற்றுக்கிழமைஅன்று 'யேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம்' தனது பத்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, இலங்கைத்தமிழ் எழுத்தாளர்களுக்கிடையில் நடத்திய...

ஒற்றைப் பனை

ஒற்றைப் பனை நீ ஒராயிரம் கவிதை நீ. தட்டத்தனியே தவிப்பாய் என் கண்களில் நீரை நிறைக்கிறாய். மண் ஆண்ட உறவுகள் மனம் ஆண்ட வாசனையில் நிறைகிறாய். முன்னோர் எழுதிய அரிச்சுவடியில் நீ. புறாவைத் தூது அனுப்பும் கவியிலும் நீ. என் பாட்டன் எல்லைக்குள் வேலி...

கண்டேன் = கொண்டேன்

தோகையில்லா மயில் ஒன்றை கண்டேன் கூண்டில் சிக்காத பறவை என்று எண்ணிக்கொண்டேன் ! சிறகில்லா அன்னப்பறவை ஒன்றை கண்டேன் சிற்பியால் செதுக்கப்பட்ட சிற்பம் என்று எண்ணிக்கொண்டேன் ! வண்ணமில்லா ஓவியம் ஒன்றை கண்டேன்...

அறிஞரின் மகன் – சிறுகதை

ஒரு கிராமத்தில் ஒரு அறிஞர் இருந்தார். அவர் ஒரு பொருளாதார மேதையா யிருந்தார். பல மன்னர்கள் தங்கள்நாட்டுப் பொருளாதாரத்தைச் சீர்படுத்த அவர் ஆலோசனையை நாடினர். ஒருநாள் ஊர்த்தலைவர் அவர் முன் வந்து அவரைப்...

ஓடி விளையாடு பாப்பா

வீதியில் விளையாட்டு இன்பான காற்றோடு. சுவாசத்தில் ஒரு பாட்டு துள்ளலான மெட்டோடு. ஓடிக் களைத்திடினும் உற்சாகமான விளையாட்டு. கணனியில் கண்ணயர்ந்து காணமல் போவதை நீ மாற்று. ஓடிப்பிடித்து சுதந்திரமாய் ஒளிந்து நீயும் விளையாடு. தேடி நட்பு நாடி வரும். தேகப்பயிற்சி கூடி வரும். பாடப்படிப்பு முடிந்தவுடன் பம்பரமாய் சுழன்றாடு. கிட்டிப்புள்ளும், கிளித்தட்டும் களிப்பு தரும்...

தோழி

இனையம் நம்மை இணைத்தது உன் முகம் பார்க்காமல் தொடங்கிய நட்பு இன்று நம் முகவரிகள் கூட மனனமானது விருப்பம் விடுகதை கவிதை கதை பரிசுகள் பகிர்ந்தோம் கண்ணியமாய் கைகோர்த்து நடக்கிறோம் நட்பின் எல்லைகளில் என்றோ ஒருநாள் முகம் சந்திப்போம் அட! பேச ஒருவிஷயம் கூட இல்லாமல் சத்தமிட்டு சிரிப்போம்:) -nandhalala-  

வன்னி மண் : எங்கள் தாய் மண்!!

வன்னியன் வலிமை வாழ்ந்து வரலாறு படைத்த மண். நூற்றாண்டு அடிமை கொண்ட வெள்ளையரிடம் அடங்காது சினங்கொண்டு எழுந்த மண். புகழ் பண்டாரவன்னியனை கற்சிலையில் பொற்சிலையாய் பெற்றெடுத்து வரலாறு கண்ட மண். கொரில்லாப் போர் புகழ் வன்னியரே என வெள்ளையனின் வரலாற்றிலும் நிமிர்ந்த மண். பின்னாலில் வரலாற்றிலும் அதனைப் பறைசாற்றிய மண். காடென்றும்...

கவிதைப் பூ..

ஒரு நாள் எனது கிறுக்கள்களை படித்து முடித்ததும்... உனக்கு பிடித்த கவிதை எது என்று என்னை கேட்டாய்... என் வாழ்க்கை என்றேன்.. உடனே கோபமாய் ஓர் பார்வை பார்த்து ஒன்றும் புரியாதவளாய்... நான் கவிதையை கேட்டேன் என்றாய்... உன்னால் எழுதப்பட்ட கவிதை என் வாழ்க்கைதானே என்றேன்... உடனே என்னை பார்க்க பிடிக்காதவள் போல் திரும்பி நின்று வெட்கப் பூ பூத்தாய்... எனது வாழ்க்கையில் இன்னுமொரு கவிதை பூ பூத்தது... -இராஜ சேகர்-

என்னவளே..

என்னால் உனக்கு காதல் பிறக்கவில்லை என்றாலும் உன்னால் எனக்கு பல கவிதை பிறக்கிறது.. துயர் மரணித்தது மகிழ்வு பிறந்தது உன் விழி மொழி கண்டு காதல் விஷம் ஏறிக்கொள்கிறது உன் அழகுண்டு.. தனி வரவை எதிர்பார்தேன் சகி ககிதம் வருகிறாய் நெஞ்சில் தனிதம் எழுகிறது தணிய மறுக்கிறது இருந்தும் சகித்துக்கொள்கிறேன்... -திசா.ஞானசந்திரன்-

ந(ர)கரத்தில் வாழ்ந்தாலும் நான் கிராமத்தில் பிறந்தவனே…..

வாய்கால் தண்ணீரில் மூழ்கிக் குளித்து வரும் சிறுநீரையும் கலக்க விட்டு மேல் தண்ணீர் விலக்கி இருகைகள் இணைத்து அள்ளிப் பருகுவேன் அப்போது புது உற்சாகம் என்னுள் பிறக்கும்.. இப்போ கூல்வாட்டர் குடிக்கின்றேன் குனிர் காய்ச்சல் அடிக்கின்றது... ஒல்லித் தேங்காய்க்கு பூவரசம் தடி சீவி கொம்புகள் அமைத்து முள்முருக்கம் சோத்தியிலே வண்டி செய்து தங்கையை அதில் அமர்த்தி வெட்ட வெளி வெயில் எல்லாம் இழுத்து...

வரலாற்றில் அழியா மே 18!!

எஞ்சியது உயிர்தான் அஞ்சி அஞ்சி அடுத்தடுத்து பலஊர்கள் எங்கள் குஞ்சுகளை சுமந்து குலங்காக்க குரல்கொடுத்தோம் எங்கள் குரல்வளை தங்கி நிற்கும் இறுதி மூச்சுவரை துஞ்சித்தும் இரக்கமில்லா அரக்கர் தேசங்கள் நஞ்சூட்டிய எமக்கு ஞானஉபதேசம் செய்கிறது இன்று அகவை ஏழாச்சு அன்று இருந்த நிலையிலேயெ நாமின்றும்.. இழந்த எம்உறவுகளை...

கண்ணே என் கண்மணியே..

கண்ணே என் கண்மணியே. காதல் பெற்ற தவக்கொழுந்தே. உயிரே உயிர் ஒளியே. உயிரில் பூத்த பூந்தளிரே. தத்தி நீ நடக்கையிலே தாவி நானும் அணைத்திடனும். தித்திக்கும் பேச்சினிலே பொழுதெல்லாம் மறந்திடனும். உன் உதட்டோர எச்சியிலே என் கன்னம் நனைத்திடனும். பொக்கை வாய்ச் சிரிப்பினிலே பொன்னூஞ்சல் ஆடிடனும். கண்கள் எனைப் பார்க்கையிலே குழந்தையாய்...

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்... பள்ளிச் சிட்டுக்களாய்... பகை மறந்து, பை சுமந்து, சென்றோமே பள்ளிக்கு....!!! பதின் ஒரு வருடங்கள். பசுமையான வருடல்கள். மறக்க முடியா மங்கள நினைவுகள். தனிமையில் மீடிப்பர்த்தேன். என் இளமை அழுகிறது...!!! நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத ஆட்களும் இல்லை...!!! நாங்கள் அங்கு...

வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

வவுனியாவில் நடைபெற்ற திருமதி மைதிலி தயாபரனின் நூல்கள் வெளியீட்டு விழா : ஒரு பார்வை!!

வவுனியா சுத்தானந்தா இந்து இளைஞர் மண்டபத்தில் 04.10.2015 அன்று திருமதி மைதிலி தயாபரனின் நான்கு நூல்கள் வெளியிடப்பட்டிருக்கிறது. 01.தவறுகள் தொடர்கின்றன - கைக்கூ வடிவம் 02.சீதைக்கோர் இராமன் - கவிதை 03.அனாதை எனப்படுவோன் - நாவல் 04.வீடுகளில் மின்சக்தி...