வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

மண்வாசனை..

  தாயின் உதிரம் கருவாகி பேச்சும் மூச்சும் உருவாகி கலந்த காற்றில் கனிந்தமர்ந்த நன்றி நினைவதில் மண்வாசனை. தத்தித் தவழ்ந்து நடை பழகி பால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய் கொஞ்சும் மொழி கதை பேசி வாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது. வேப்பமரத்து நிழல் இருந்து கூட்டாஞ்சோறு நாம்...

குழந்தையின் வலி

வாழ்க்கை அடித்த வலியிலே குழந்தை நீயும் அழுகிறாய். கேள்வி கேட்க தெரியவில்லை. தேம்பி நீயும் அழுகிறாய். அம்மா என்ற ஒரு சொல்லில் இருண்டு விட்டது உலகமே. அப்பா என்ற மறு சொல்லில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. விதிவழி போகிறாய். விடியல் காண ஏங்கிறாய். சண்டை அற்ற...

கனவின் இசை.

கும் இருட்டில்-நீளும் இரவுகளின் காவலில் அருந்ததிகளின் ஆசீா்வதிப்புக்களுடன் மெல்ல அசைகிறது -இசை சாளரங்கள் மூடப்பட்ட-பின்னும் முற்றுப்பெறமறுத்து கனவுகளில் வழிந்தோடும் நீா்ச் சொரியலாய்-என்னுள் புகுந்து தாவுகின்றது கனவின் இசை நான் தேடும்என்னவனாய்.. அவனுக்கு தெரியுமோ என்னமோ?இசைக்குத் தெரியும் வெற்றிடமான -என் இதயத்தில் கனவைநிரப்புவது எப்படியென்று.. தொலை தூரம் நான் கானும்என்னவனின் சிரிப்பொழியை மென்றுவந்து- இரைமீட்டு செல்கின்றது என் கனவில் தினமும் -இசை தகிக்கும் முத்தங்களின் நினைவுகளின் வெப்பக் கனதி படுக்கையை நனைக்க... இரவுக்...

கொரோனா காலமும் கிரக மாற்றமும் : ஒரு இளைஞனின் எண்ணத்திலிருந்து!!

நாளாந்த பத்திரிகைகளை நாள் தோறும் புரட்டும் வேலையினையே கிரமமாக செய்து வருகிறேன். நாட்டு நிலமையையும் வீட்டு நிலமையையும் கருத்திற்கொண்டே நான் மைதானத்திற்கு வருகை தருவதில்லை என்பதை ஒருவரேனும் புரியாமல் இருக்கமாட்டார்கள் என நம்புகின்றேன். அதுமட்டுமல்லாது,...

என் அறை

என் அறைக்குள் வர நினைக்கிறீர்களா சிறிது நேரம் தாமதியுங்கள் என் அறைக்குள் வருவதற்கு முன் தனிமைப் புத்தகத்தை ஒரு முறை எனினும் நீங்கள் வாசித்திருக்க வேண்டும் ஒரு தேநீர் குவளையோடு யன்னல் மழைய ரசித்து அருந்த தெரிந்திருக்க வேண்டும் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடமாட தெரிந்திருக்க வேண்டும் புழுதி வாசத்தை வெளியேறி...

என்னுள் இசையாகிறாய்..

திஸ்ட்ட நடையில் துள்ளித்திரிந்தேன் உனைப்பார்த்ததும் சதுஸ்ட்ட நடையாகி கல்யானி இசைக்கிறேன்.. ராகமாலிஹாவாய் குளைகின்றாய் நீலாம்பரியாய் தோளிடுகின்றேன் வளைந்து மடியில் வீணையாகின்றாய் என் விரல் மூக்கின் நுணிபட மூச்சு மோகனம் பாடுகிறது.. நான் தட்டிடுவேனெ தவிலாகின்றாய் தொட்டிட மனம் நாயனமாகின்றது விரல் முட்டிட முட்டிகள் தபேலாவாகின்றது இசை கொட்டிட மெட்டிட உன் கண்களில் வரி தேடுகிறேன்.. எதுகையும் மோனையுமாய் கண்கள் தொடங்கி கண்டைக்கால் வரை கவிதை பெருகுகின்றது.. உலகிலேயே...

தாய்மையது போற்றிடுவோம்..

தாய்மையது போற்றிடுவோம் நாளும்- பெண் தவமது என்றிடுவோம் மீளும்- கண் தாய்மையவள் மென்மையவள் தூய்மையவள் பெண்மையவள் தேற்று உயர்வு ஏற்று. வாய்மையது தன்னுதிரம் தந்து -மண் வாழ்வளித்த தெய்வமவள் நொந்து -என் வரமென்றும் உரமென்றும் தரமென்றும் கரமென்றும் வார்த்தாள் என் ஆத்தாள். -குமுதினி ரமணன்-

நவயுக நட்பு

முல்லை மொட்டுக்களாய்... பள்ளிச் சிட்டுக்களாய்... பகை மறந்து, பை சுமந்து, சென்றோமே பள்ளிக்கு....!!! பதின் ஒரு வருடங்கள். பசுமையான வருடல்கள். மறக்க முடியா மங்கள நினைவுகள். தனிமையில் மீடிப்பர்த்தேன். என் இளமை அழுகிறது...!!! நாங்கள் அடி வாங்காத ஆசிரியர் இல்லை எங்களின் பகிடி வதைக்கு பலிஆகத ஆட்களும் இல்லை...!!! நாங்கள் அங்கு...

இன்று..

வாழ்வின் இறுதி அத்தியாயங்களில் -உயிருடன் ஊசலாடிக் கொண்டிருக்கும் -எம் ஈழத்து உறவுகளை -இன்னும் என்ன செய்ய போகின்றாய்? உண்மைகள் மறைக்கப்படும் இரவுகள் தொடர்ந்து கொண்டே விடிகின்றது எம் முற்றம்.. எங்கோ மண் பிறாண்டி துடிப்படங்கும்-நாயின் ஓலமும் இரும்புச் சப்பாத்துகளின் இரக்கமற்ற உதைப்புகளும் சொல்லித் தருகின்றன எம் மீதான பார்வைகளை.. எதை எதையோ எழுத நினைத்த-என் கரங்கள் அடங்கிப்போயிற்று ஒரு...

வைகாசி நிலவு : வற்றாப்பளை கண்ணகி அம்மன் சிறப்புக் கவிதை!!

பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய்.. பத்தாவது இடத்தில் பக்குவமாய் இருந்ததால்.. பத்தாப்பளையென்று பெயரெடுத்தது நந்திக்கடலோரம்.. கற்புக்கரசி கண்ணகிக்கு கோயிலுங் கண்டது. நந்திக்கடலோரத்தில் தண்ணியெடுத்துப் பொங்கிநின்ற தனையனிடம்.. தலைகடிக்கிறது ஓர்தடவை பார்மகனே என்றாளாம். பார்த்தவன்.. பதறியடித்து விழி பிதுங்கி நின்றானாம். தலையெல்லாம் ஆயிரங் கண்கள். அதனால்த்தானே நாம்.... கண்கள் கொண்ட மண்பானையில் கற்புரம் ஏற்றுகிறோம் -...

சூரியன் விழுகின்ற கடலினில்..

சூரியன் விழுகின்ற கடலினில் என்னை நனைய விடு..! விரிகின்ற வெளிகளில் தனிமையின்... கவிதையை படிக்க விடு..! மழை பொழிகின்ற வேளையினில் மரங்களின்... வேர்களாய் மகிழ விடு..! ஒளிர்கின்ற மெழுகினில் உன் பிரிதலின்... வலியினை கருக விடு..! அலைமோதும் ஓசையினில் உரிமையாய்... எனதன்பினை எடுத்து விடு..! தினம் விடிகின்ற...

உலகம் மாறிப் போகுதையா!!

குடிதண்ணிக்காய் உயிர் தவிக்கும் உடலுள்ளே தண்ணியும் குடலரிக்கும் அடுப்பிலே பூனையும் படுத்திருக்கும் அநியாய வட்டியில் குடி தொடரும்-பணம்.. கொடுத்தவன் உறுதியை அறுதியென்பான்-இவன் தொங்கிட கோவணம் இல்லையென்பான் தின செய்திகள் தலைப்பெல்லாம் தற்கொலைகள் திடுக்கிடும் தகவல்கள் வேதனைகள் பாவிகள் செய்திடும் வன்செயல்கள்.. ஆவியாகினும் அடங்கிடா தறுதலைகள் முறையற்ற உறவுகள்...

ஒத்தையிலே நிற்கிறியே..

மங்கல நாண் பூட்டி மதியொளி அழகு காட்டி நெஞ்சுக்குள் குளிர்ந்தவனை நெருப்பாற்றில் தொலைத்தாயோ. புறநானூற்று வீரனம்மா. புறமுதுகு காட்டவில்லை. சதி வலையில் சிக்க வைத்தே சிறைபிடித்துப் போனாரம்மா. எண் பத்து ஆயிரமம்மா யுத்தத்தில் விதவைகள் நெருப்பாற்றின் வரலாறுகளம்மா. கற்பாலே ஊர் எரித்த கண்ணகியின் கோயிலிலே தீச்சட்டி ஏந்தியவளே உன் நெஞ்சத்து நெருப்பதனை பெண் தெய்வம்...