காதல்…… என்னவென்று கூற

மாதம் பன்னிரெண்டும் எனை மதியாது கழிந்தோட, ஈகைப் பண்புள்ள வெறுமையோ நாளும் எனை வாட்ட, நித்திரைப் பொழுதில் நிசப்த்த நாளங்கள், ஒத்திகை நடத்துதே என் விழியோர ஈரங்கள்.. நேசம் வீசி நாடி வந்தேன்,...

குழந்தையின் வலி

வாழ்க்கை அடித்த வலியிலே குழந்தை நீயும் அழுகிறாய். கேள்வி கேட்க தெரியவில்லை. தேம்பி நீயும் அழுகிறாய். அம்மா என்ற ஒரு சொல்லில் இருண்டு விட்டது உலகமே. அப்பா என்ற மறு சொல்லில் ஆறுதல் சொல்ல யாரும் இல்லை. விதிவழி போகிறாய். விடியல் காண ஏங்கிறாய். சண்டை அற்ற...

தாய்மையது போற்றிடுவோம்..

தாய்மையது போற்றிடுவோம் நாளும்- பெண் தவமது என்றிடுவோம் மீளும்- கண் தாய்மையவள் மென்மையவள் தூய்மையவள் பெண்மையவள் தேற்று உயர்வு ஏற்று. வாய்மையது தன்னுதிரம் தந்து -மண் வாழ்வளித்த தெய்வமவள் நொந்து -என் வரமென்றும் உரமென்றும் தரமென்றும் கரமென்றும் வார்த்தாள் என் ஆத்தாள். -குமுதினி ரமணன்-

இரு இளம் மருத்துவர்கள் பிரசவித்த”இருளைப் படைத்தல்” கவிதை நூல் – ஓர் பார்வை!!

மருத்துவ உலகின் முத்துக்கள் இரண்டு சேர்ந்து இலக்கியச் சிற்பிக்குள்ளிருந்து அண்மையில் வெகுண்டெழுந்திருக்கின்றன. பேரன்பும் பெருங்கோபமும் கொண்டோரால் வெளியிடப்பட்டிருக்கிறது. செ.மதுரகன், பா.திலீபன் இணைந்து வவு/தமிழ் மாமன்றத்தினூடாக இப்படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். உலகிற்கே ஒளி தரும் மருத்துவர்களால் இருள்...

இலக்கியப் படைப்புக்களும் இன்றைய இளைய சமுதாயமும்!!(ஆய்வுக் கட்டுரை)

பதினைந்தாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் இருண்ட யுகத்திற்குப் பின்னான மறுமலர்ச்சிக் காலமானது அவர்களின் பல்வேறு முன்னேற்றங்களுக்கு வித்திட்டதைப் போல எமது நாட்டில் தற்பொழுது காணப்படும் அமைதியான சூழ்நிலையானது பலவிதமான அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு வித்திடுவதைக் கண்கூடு...

என்னவளே..

என்னால் உனக்கு காதல் பிறக்கவில்லை என்றாலும் உன்னால் எனக்கு பல கவிதை பிறக்கிறது.. துயர் மரணித்தது மகிழ்வு பிறந்தது உன் விழி மொழி கண்டு காதல் விஷம் ஏறிக்கொள்கிறது உன் அழகுண்டு.. தனி வரவை எதிர்பார்தேன் சகி ககிதம் வருகிறாய் நெஞ்சில் தனிதம் எழுகிறது தணிய மறுக்கிறது இருந்தும் சகித்துக்கொள்கிறேன்... -திசா.ஞானசந்திரன்-

என் காதலி போலவே..

உன்னால் நொந்துதான் காலணி செய்தார்கள் உன்னை நீக்கியே மீனினை உண்பார்கள்.. உன்மேல் அழகுறும் மலர்தனைக் கொய்வார்கள் உன்னைப் பிரித்துதான் சுளைதனை சுவைப்பார்கள்.. உன்னை விலக்கியே எலுமிச்சம் கனிதனைப் பறிப்பார்கள் தாகம் நீக்கிடும் பானமும் செய்வார்கள்.. உன்னை கிளையுடன் வெட்டி வேலி அமைப்பார்கள் பயிர்களைக் காத்துதான் பயன் பல பெறுவார்கள்.. நீ இருக்கும் இடமெலாம் இன்பமும் இனிமையும் இருக்கும் இருந்தும் நீ முள்ளு என் காதலி...

பதினைந்தாம் பொருத்தம்..

எந்தக்கடையிலும் கிடைக்காத ஒன்றை தேடுகிறேன் எனக்கது கிடைக்காது என்று தெரிந்தும். எட்டாத கனி என உனை நினைத்தேன் இருந்தும் முயற்சித்தேன் எட்டிவிட்டேன் கட்டியும் அணைத்தேன். தொட்டிலில் புது சொந்தம் கிடைத்தது மட்டில்லை மகிழ்விற்கு இருந்தும் தொடரவில்லை.... தொடர்ந்தது கருத்துமோதல் இருண்டது என் மனவானம் விடிந்திட சூரியன் இல்லை.. தொலைந்தது நிம்மதி அதைத்தான் தேடுகின்றேன்.... இருமனம் சேர்ந்து திருமணம் கொண்டாலும் இருவர் பணமதும் சரியாய் பொருந்திட வேண்டும். பதின்நான்கு பொருத்தத்தில் புதிதாய்...

பட்ட மரத்தடியில் ஓர் பருவக் குழந்தை!!

வெள்ளிக் கோலங்களால் விடிந்து கிடந்தது உறவுகளின் முற்றம்... என் மன முற்றம் மட்டும் இருண்டு கிடந்தது ஏனோ? எத்தனை வயது வரை என்னைத் தூக்கிச் சுமந்திருப்பாய்.. தாயின் மார்க்காம்பு சப்பலை விட உன் உப்பு விரல்க் காம்பு சப்பி சுகம் கண்ட பிள்ளையல்லவா நான்.. மயிலிறகு கனவு...

மண்வாசனை..

  தாயின் உதிரம் கருவாகி பேச்சும் மூச்சும் உருவாகி கலந்த காற்றில் கனிந்தமர்ந்த நன்றி நினைவதில் மண்வாசனை. தத்தித் தவழ்ந்து நடை பழகி பால்நிலவின் ஒளியில் சோறூட்டி தாய் கொஞ்சும் மொழி கதை பேசி வாழ்வின் அர்த்தம் சொல்லும் நினைவது. வேப்பமரத்து நிழல் இருந்து கூட்டாஞ்சோறு நாம்...

உறங்காத இரவுகளுக்குப் பின்னே நிஜமான கனவு……

ஒவ்வொரு மாதமும் கலைந்து போயின எதிர்பார்ப்புகள்..... எட்டு வருடங்களாக நுகரவில்லை நாசி பால் மணம் வீசும் மழலையின் நறுமணத்தை..... குருதியோடு சேர்ந்து கரைந்து ஓடின கனவுகள்... கடவுள்களும் மருந்துகளும் அன்றாட அவசியங்கள்... கிழித்தும்...

வைகாசி நிலவு- வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை- வே.முல்லைத்தீபன்-!!

(எதிர்வரும் 01.06.2015 அன்று வற்றாப்பளை கண்ணகி அம்மன் திருக்குளிர்த்தியை முன்னிட்டு எழுதப்பட்ட சிறப்புக்கவிதை. மரபுகள்.. சம்பிரதாயங்கள் சிலவற்றைக் காணலாம்) வைகாசி நிலவு ********************* பாண்டிய மன்னனின்.. பிழையான தீர்ப்பினால் மதுரையை எரித்துவிட்டு - தல தரிசனங்களின் தொடர்ச்சியாய் பத்தாவது இடத்தில் பக்குவமாய் வந்தமர்ந்ததால்.. பத்தாப்பளையென்று நந்திக்கடலோரம் பெயரெடுத்தது -...

என் அறை

என் அறைக்குள் வர நினைக்கிறீர்களா சிறிது நேரம் தாமதியுங்கள் என் அறைக்குள் வருவதற்கு முன் தனிமைப் புத்தகத்தை ஒரு முறை எனினும் நீங்கள் வாசித்திருக்க வேண்டும் ஒரு தேநீர் குவளையோடு யன்னல் மழைய ரசித்து அருந்த தெரிந்திருக்க வேண்டும் ஒற்றை மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் நடமாட தெரிந்திருக்க வேண்டும் புழுதி வாசத்தை வெளியேறி...

என் கண்ணன் வரும் நேரம்..

விண் மீன்கள் வழி பார்த்து கடல் மீன்கள் வளம் பார்த்து என் கண் மீன்கள் துயர் தீர வரும் நேரம் தோழி என் கண்ணன் வரும் நேரம் தோழி. ஊர் உறங்கும் சாமத்தில் என் கண் உறங்கா ஏக்கத்தில்...

நினைவுகளின் கனவுத் தொடர்…

வானம் சூரிய குளியலுக்காய் தயாராகியது.. நிலவு இலவச மின்சாரத்தை இடை நிறுத்திக் கொண்டது.. நட்சத்திரங்கள் தலையணை தேடின.. சேவல்களும் குயில்களும் செய்தி அறிவித்தன.. கதிரவன் வரவேற்பு புன்னகைக்காய் மொட்டுக்கள் உதடுகள் அசைக்கத் தொடங்கின.. அவள் விழிகளுக்கு மட்டும் இன்னும் விடியவில்லை ஏனெனில்.. அவன் நினைவுகளின் கனவுத் தொடர் இன்னும் முடியவில்லை.. -திசா.ஞானசந்திரன்-

வாழ்க்கை வரமா பாரமா?

வாழ்வதற்காய் பிறந்தவர்கள் நாம் உயர்வாய் வாழ்வின் பொருள்ளுணர்ந்து வாழ்தல் வேண்டும். வீழ்வதெல்லாம் வெற்றியின்முதல் படியாக எண்ணி வீழ்ந்தே கிடந்திடாமல் எழுதல் நன்றே. ஏழ்மை நிலை வந்தெம்மை வாட்டினாலும் எளிமைகாத்து பொறுமையுடன் வாழ வேண்டும். தேடியவர் செல்வம் செல்லும் போது தேகமதன் உயிர் பிரிவைத்...