நவம்பர் மாத ராசி பலன்கள் – துலாம்!!

300

thula

தமது திறமையால் சகலரையும் தன்பால் இழுத்துக் கொள்ளும் வசீகர சக்தி படைத்தவர்கள், நீங்கள். இந்த மாதம் எல்லா விதத்திலும் நன்மை உண்டாகும். எதையும் துணிச்சலோடு எதிர் கொள்வீர்கள். தடைபட்டு வந்த காரியங்களில் இருந்த தடை நீங்கும். ராசியாதி பதியான சுக்கிரன் ராசிக்கு 2ல் சஞ்சாரம் செய்வதால் சாமர்த்தியமான பேச்சால் ஆதாயம் உண்டாகும்.

பணவரத்தும் அதிகரிக்கும். உங்கள் செயல்களுக்கு தடைகளை ஏற்படுத்தியவர்கள் தாமாகவே விலகிச் செல்வார்கள். தொழில், வியாபாரம் போட்டிகள் நீங்கி நன்கு நடக்கும். உங்களது வியாபாரத்திற்கு முக்கியமான பிரமுகர் ஒருவரின் உதவி கிடைக்கும்.

முக்கியப் பொறுப்புகளில் இருப்பவர்களின் ஆதரவும் கிடைக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் சாதூர்யமான பேச்சால் மேலதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றி பாராட்டு பெறுவார்கள். நீண்ட நாட்களாக நின்ற பதவி உயர்வு உங்களைத் தேடிவரும். சக ஊழியர்களிடம் உங்களைப்பற்றிய மதிப்பும் மரியாதையும் உயரும். வாழ்க்கைத் துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார். பிள்ளைகளின் நலனுக்காக பாடுபடுவீர்கள். விருந்தினர்களின் வருகை இருக்கும்.

தடைபட்டு வந்த திருமணக் காரியங்கள் விரைந்து நடக்கும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சூரியன், ராகுவின் சஞ்சாரத்தால் குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்துபோகும். கவனம் தேவை. பெண்களின் சாதூர்யமான பேச்சால் ஆதாயம் உண்டாகும். பணவரத்தும் அதிகரிக்கும். காரியத் தடைகள் நீங்கும். உங்களின் பேச்சிற்கு வீட்டில் மரியாதை கிடைக்கும்.

மாணவர்களுக்கு ஆசிரியர்கள், சக மாணவர்களின் உதவி கிடைக்கும். பாடங்களை நன்கு படிப்பது கூடுதல் மதிப்பெண்களை பெற உதவும். கலைத்துறையினருக்கு இது சிறப்பான மாதமாக அமையும். தாமதமாகி வந்த வாய்ப்புகள் அனைத்தும் திரும்பக் கிடைக்கும். சமூக சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சமூக அந்தஸ்தும் உயரும்.

பரிகாரம் : வெள்ளி கிழமைகளில் சப்தகன்னியரை அர்ச்சனை செய்து வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். செல்வம் சேரும். செல்வாக்கும் உயரும்.

சந்திராஷ்டமம் : 18, 19, 20 திகதிகளில் இரவு நேரங்களில் சுயமாக வாகனத்தை இயக்குவது கூடாது.

சொல்ல வேண்டிய மந்திரம் : ஸ்ரீ சியாமளா தண்டகம் படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். தைரியம் பிறக்கும்.

சிறப்பு பரிகாரம் : சனிக்கிழமை தோறும் அம்பாளுக்கு இலுப்பை எண்ணெயால் தீபமேற்றி வழிபடவும்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, திங்கள், வியாழன்.
தேய்பிறை  : ஞாயிறு, திங்கள், வெள்ளி.