நவம்பர் மாத ராசி பலன்கள் – விருச்சிகம்!!

377

viruchikam

முன்கோபத்தைக் குறைத்து செயல் படுவதன் மூலம் அதிர்ஷ்ட பாதையில் முன்னேற்றங்கள் பல காணுவீர்கள். இந்த மாதத்தில் வாழ்க்கை தரம் உயர நீங்கள் எடுக்கும் முயற்சிகள் யாவும் கைகூடும். நெருக்கமானவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். ராசியாதிபதி செவ்வாய் ராசிக்கு பத்தில் சூரியன் வீட்டிலிருந்து ராசியைப் பார்ப்பதால் முன்பின் யோசிக்காமல் எதையாவது பேசி விடுவீர்கள். இதனால் வீண் மனஸ்தாபங்கள் ஏற்படலாம்.

வழக்கத்தைவிட செலவும் கூடும். செலவு செய்யும் முன்பு தகுந்த ஆலோசனைகள் அவசியமாகிறது. தொழில், வியாபாரம் தொடர்பான பேச்சுவார்த்தைகளின்போது மிகவும் நிதானமாகப் பேசுவது நன்மையைத் தரும். எதிர்பார்த்த பணம் தாமதமாக கிடைக்கும்.

புதிய ஓர்டர்கள் கிடைக்க அலைய வேண்டியது இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு வகையில் அலைச்சல், கூடுதல் செலவை சந்திப்பார்கள். வேறொருவர் செய்த செயலுக்கு வீண்பழி ஏற்க வேண்டியிருக்கும். எனவே கவனம் தேவை. குடும்பத்தில் இருப்பவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே வீண் மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்துச் செல்வதன் மூலம் நன்மையே உண்டாகும்.

உறவினர்களிடம் பேசும்போதும் அவர்களின் கேள்விகளுக்கு பதில் சொல்லும் போதும் நிதானமாக இருப்பது நல்லது.
உங்களது பொருட்களை பத்திரமாக வைத்துக் கொள்வது நல்லது. பெண்கள் முன் பின் யோசிக்காமல் பேசுவதை தவிர்ப்பது நல்லது. இந்த மாதம் செலவுகள் கூடும். பெரும்பாலான நல்ல முயற்சிகளில் சாதகமான பலன்களே கிடைக்கும்.

மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கூடுதல் கவனம் செலுத்திப் படிப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். சகமாணவர்களிடம் கவனமாகப் பேசுவது நல்லது. கலைத்துறையினருக்கு அனைத்து வகையிலும் நன்மைகளே கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த சுணக்க நிலை மாறும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.

பரிகாரம் : கந்தர் அனுபூதி நூலை பாராயணம் செய்து முருகனை வழிபடுவது காரியத் தடைகளை நீக்கும். எதிர்ப்புகள் அகலும்.

சந்திராஷ்டமம்: 21, 22 திகதிகளில் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமல் இருப்பது நல்லது.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீஆதிகுருவே நமஹ“ என்ற மந்திரத்தை 18 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : சஷ்டிதோறும் முருகனுக்கு பஞ்சாமிர்த அபிஷேகத்திற்குப் பழங்கள் வாங்கிக் கொடுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : ஞாயிறு, புதன், வியாழன்.
தேய்பிறை : புதன், வியாழன்