நவம்பர் மாத ராசி பலன்கள் – மகரம்!!

382

makaram

தோல்விகளை வெற்றியின் படிகளாகக் கருதி எதைப் பற்றியும் கவலைப்படாமல் செயல்படும் மன உறுதி கொண்ட மகர ராசிக் காரர்களே இந்த மாதம் பணவரத்து கூடும். வாக்கு வன்மையால் லாபம் உண்டாகும். தொழில் ராசியில் சூரியன், புதன், ராசிநாதன் சனி, ராகு ஆகியோர் சஞ்சாரம் செய்வதால் வீண் பயணங்களும் அலைச்சலும் உண்டாகும்.

இடமாற்றம் ஏற்படலாம். கெட்ட கனவுகள் தோன்றும். உஷ்ண சம்பந்தமான நோய்கள் வந்து நீங்கும். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஓடர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விட குறைவாகவே இருக்கும். தொழில் தொடர்பான அலைச்சல்களும் ஏற்படும்.

கவனமாக இருப்பது அவசியம். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்யோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லது. முக்கியமாக மேலதிகாரிகளிடம் சொன்ன வாக்கைக் காப்பாற்றவும்.

கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். நெருப்பு ஆயுதங்களை பயன்படுத்தும் போது மிகவும் எச்சரிக்கை தேவை.
பிள்ளைகள் தங்களை அனுசரித்துச் செல்வார்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் பயணங்களும் ஏற்படலாம். நேரம் தவறி உண்பதை தவிர்ப்பது நல்லது. சாமர்த்தியமான பேச்சு லாபம் தரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி நீங்கும்.

மாணவர்களுக்கு கவனம் சிதற விடாமல் பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளின்போது கவனம் தேவை. நண்பர்களுடன் நிதானமாகப் பழகுவதும் நன்மை தரும். கலைத்துறையினருக்கு எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். கடன் பிரச்னை தீரும். எதிர்ப்புகள் அகலும், தொழில் வியாபாரம் தொடர்பான போட்டிகளும் நீங்கும்.

பரிகாரம் : சனிக்கிழமையில் ஆஞ்சநேயரை வழிபடுவது கஷ்டங்களை போக்கும். மனதில் தைரியம் உண்டாகும்.

சந்திராஷ்டமம் : 25, 26, 27 திகதிகளில் மறதி அதிகமாக இருக்கும். கவனத்தோடு இருங்கள்.

சொல்ல வேண்டிய மந்திரம் : “ஓம் ஸ்ரீஆஞ்சநேயாய நமஹ“ என்ற மந்திரத்தை 17 முறை சொல்லவும்.

சிறப்பு பரிகாரம் : எள் சாதம் கலந்து சிவன் கோயிலில் சனிக்கிழமையன்று விநியோகம் செய்யுங்கள்.

அதிர்ஷ்ட கிழமைகள்:

வளர்பிறை : திங்கள், வியாழன், வெள்ளி.
தேய்பிறை  : திங்கள், வெள்ளி.