டிசம்பர் மாத ராசி பலன் – விருச்சிகம்!!

334

viruchikam

பணம், பரிசு தந்தாலோ, பாராட்டி சீராட்டிப் பேசினாலோ பணியாத நீங்கள், பாசத்திற்கும், நேர்மைக்கும் கட்டுப்படுவீர்கள். மண்ணாக இருந் தாலும், பொன்னாக இருந் தாலும் வாரிபூசிக் கொள்ளாமல் தூரத்தில் வைத்து அழகு பார்ப்பீர்கள். கடந்த ஒரு மாதகாலமாக உங்கள் ராசியிலேயே அமர்ந்திருந்த சூரியன் இப்போது ராசியை விட்டு விலகியிருப்பதால் வயிற்று வலி, முதுகு வலி விலகும்.

புதன் சாதகமான வீடுகளில் செல்வதால் சமயோஜிதமாகப் பேசி சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். உறவினர்களுடன் இருந்து வந்த மனத்தாங்கல் நீங்கும். சுக்கிரன் 3ம் வீட்டில் மறைந்து கிடப்பதால் வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகிக் கொண்டே போகும். அக்கம்-பக்கம் வீட்டாருடன் அனுசரித்துப் போவது நல்லது.

விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். உங்கள் ராசிநாதனான செவ்வாய் லாப வீட்டில் நிற்பதுடன் குருவுக்கு 4ம் வீட்டில் அமர்ந்து குரு மங்கல யோகத்துடன் அமர்ந்திருப்பதால் உங்களுடைய செல்வாக்கு கூடும். ஆளுமைத் திறனும் அதிகரிக்கும். உங்களின் பிரபல யோகாதிபதியான குருபகவான் 8ம் வீட்டில் மறைந்திருப்பதாலும், ஏழரைச் சனி நடைபெறுவதாலும் தூக்கம் அவ்வப்போது குறையும்.

அரசியல்வாதிகள் பேச்சிலே கவனம் தேவை. எதிர்க்கட்சியினரை அத்துமீறி தாக்கிப் பேச வேண்டாம். கோஷ்டி அரசியலில் ஈடுபடாதீர்கள். தலைமைக்கு கட்டுப்படுவது நல்லது.

மாணவர்கள் நண்பர்களின் ஆதரவு பெருகும். கலைப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெறுவீர்கள். விளையாட்டிலும் பதக்கம் வெல்வீர்கள். சக மாணவர்கள் மத்தியில் மதிப்பு கூடும். வகுப்பாசிரியரின் பாராட்டும் கிடைக்கும்.

கன்னிப் பெண்கள் காதல் விவகாரத்தை தள்ளி வைத்துவிட்டு உயர்கல்வியில் கவனம் செலுத்துங்கள். பெற்றோரின் கனவுகளை நனவாக்க தவறாதீர்கள். மாதத்தின் பிற்பகுதியில் நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.

வியாபாரம் ஓரளவு சூடுபிடிக்கும். பழைய வாடிக்கையாளர்கள் வருவார்கள். பங்குதாரர்களுடன் விட்டுக் கொடுத்துப்போவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் மனங்கோணாமல் நடந்து கொள்ளுங்கள். கெமிக்கல், மருந்து, உணவு, பெயின்ட் வகைகளால் லாபம் கூடும். உத்யோகத்தில் கடந்த மாதத்தைவிட இந்த மாதத்தில் செல்வாக்கு கூடும்.

வேலைச்சுமையும் குறையும். இடமாற்றமும் திருப்திகரமாக இருக்கும். உங்களுக்கு தொல்லை கொடுத்து வந்த அதிகாரி வேறு இடத்திற்கு மாற்றப்படுவார். புது அதிகாரி உங்களுக்கு ஆதரவாக இருப்பார். சம்பள நிலுவை கைக்கு வரும்.

கலைத்துறையினர் மூத்த கலைஞர்களின் ஆதரவால் முன்னேறுவீர்கள். முடங்கிக் கிடந்த உங்களின் படைப்பு வெளியா வதற்கு சில முக்கியஸ்தர்கள் உதவுவார்கள். விவசாயிகள் பூச்சித் தொல்லை குறையும். பக்கத்து நிலத்துக்காரருடன் இருந்த பகைமை நீங்கும். வருமானம் உயரும். கறாராகப் பேசி விட்டதைப் பிடிக்கும் மாதமிது.

ராசியான திகதிகள்:
டிசம்பர் : 16, 23, 24, 25, 26
ஜனவரி : 1, 3, 9, 10, 11, 12.

சந்திராஷ்டம தினங்கள் : டிசம்பர் 17ம் திகதி நண்பகல் 12 மணி முதல் 18, 19 மற்றும் ஜனவரி 13ம் திகதி இரவு 7 மணி முதல் எதிலும் எச்சரிக்கையுடன் செயல்படப்பாருங்கள்.

பரிகாரம் : பெருமாளை தரிசித்து வாருங்கள். நிறைய மரக்கன்றுகளை நட்டுப் பராமரியுங்கள்.