அரச அதிகாரி ஒருவரின் கேள்வியால் பதறிப் போன ஆளுநர் சந்திரசிறி!!

634

Chanre Sriவடக்கில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை முதலமைச்சரின் கீழா அல்லது அதிகாரமிக்க ஆளுநரின் கீழா அரச அதிகாரிகள் பணியாற்றுவதென்று ஆளுநர் சந்திரசிறியிடம் அரச அதிகாரி ஒருவர் கேள்வி எழுப்பியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

13வது திருத்தச் சட்டத்தில் ஆளுநருக்கு உள்ள அதிகாரங்கள் தொடர்பாக விளக்கமளிக்கும் கலந்துரையாடல் ஒன்று நேற்று கோப்பாய் தேசியக் கல்வியற் கல்லூரியில் நடைபெற்றது.

இதன்போதே இந்தக் கேள்வியை குறித்த அதிகாரி ஆளுநரின் நேரடியாகக் கேட்டார். இதன்போது ஆளுநரின் அதிகாரிகள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டு அரச அதிகாரிகள் கேள்வி கேட்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இதன்போது அனைத்து அரச அதிகாரிகளும் மௌனமாக இருந்தனர். குறித்த பெண் அதிகாரி மட்டும் துணிச்சலாக எழுந்து கேள்வி கேட்டார்.

வடமாகாண அரச அதிகாரிகள் முதலமைச்சரின் அதிகாரத்தின் கீழ் உள்ள பிரதம செயலரின் கீழா அல்லது ஆளுநரின் செயலாளரின் கீழா பணியாற்றுவது என்பது என்று கேட்டார்.

சற்றும் எதிர்பாராத இந்த கேள்வியினால் தடுமாறிய ஆளுநர், சட்டம் ஒழுங்கின் கீழ் மாகாண சபை பணியாற்ற வேண்டும் என்று மழுப்பலாக கூறி கேள்வியை முடித்துக் கொண்டார்.