வவுனியாவில் கடும் வறட்சி, குடிநீருக்கும் தட்டுப்பாடு!!

497

varatchi

வவுனியாவில் தொடரும் வறட்சி காரணமாக பல பகுதிகளில் குடி நீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் குளங்கள் மட்டுமன்றி கிணறுகளும் வற்றிவிட்டன.

கடும் வெயில் காரணமாக வேலைக்குச் செல்வோரும் பாடசாலை செல்லும் மாணவர் உட்பட முதியோரும் கடும் சிரமங்களுக்கு முகம்கொடுக்கின்றனர்.

வறட்சியான காலநிலை காரணமாக யாழ்ப்பாணம், திருகோணமலை, வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு அனுராதபுரம், பொலன்னறுவை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.

பொலன்னறுவை மாவட்டமே அதிகளவு பாதிக்கப்பட்டுள்ளது. அந்த மாவட்டத்திலுள்ள 7 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 6 பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட மக்கள் வரட்சி காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

14 ஆயிரத்து 348 குடும்பங்களை சேர்ந்த 52 ஆயிரத்து 514 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே, நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வரட்சியான காலநிலை இந்த மாத இறுதி பகுதி வரை நீடிக்கும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

காலநிலை அவதான நிலையம் விடுத்துள்ள செய்திக்குறிப்பொன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. எதிர்வரும் 28 ஆம் திகதியின் பின்னர் ஓரளவு மழை பெய்யக்கூடும் என எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.