உலகில் மிகப்பெரிய தொலைநோக்கி சீனாவில் உருவாக்கம்!!(காணொளி)

402

china-fast-aperture-spherical-telescope

பிரபஞ்சத்தில் புத்திக்கூர்மை உள்ள வேற்று கிரகவாசிகளின் நடமாட்டத்தை கண்டறியும் சக்திகொண்ட உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கியை சீனா உருவாக்கியுள்ளது.

தென்மேற்கு சீனாவின் குயிசு மாகாணத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி 500 மீட்டர் பரப்பளவுடன் 30 டன் எடைகொண்டது, இதில் 34 அடி நீளம் கொண்ட தகடுகள் அமைப்பட்டுள்ளன.

பிரபஞ்சத்தில் நடைபெறும் காட்சிகள் இந்த தகடுகளில் பட்டு பிரதிபலிப்புடன் பதிவாகும்.

இந்த காட்சிகளை வைத்து வேற்று கிரகவாசிகள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

30 கால்பந்து மைதானம் அளவிலான இந்த தொலைநோக்கியை அமைப்பது தொடர்பாக 20 ஆண்டுகளுக்கு முன்னரே சீன விஞ்ஞானிகள் முடிவு செய்தனர்.

கடந்த 2011 ஆம் ஆண்டு இதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டு தற்போது, 1.2 பில்லியன் யுவான்செலவில் இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

4450 பிரதிபலிப்பான்களை (panel reflector) கொண்ட இந்த தொலைநோக்கியை அமைப்பதற்காக அப்பகுதியில் வசிக்கும் சுமார் 8000 பேர் அப்புறப்படுத்தப்பட்டனர்.