500வது டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி சாதனை!!

307

india

இந்திய மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 197 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

தனது முதல் இன்னிங்ஸ்சில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி முதலாம் நாள் ஆட்டநேர நிறைவில் சகல விக்கட்களையும் இழந்து 318 ஒட்டங்களை பெற்றது.

இதனையடுத்து தனது முதலாவது இனிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 262 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்படி 56 ஓட்டங்களால் இந்திய அணி முன்னிலை பெற்றிருந்தது.

நியூசிலாந்து அணியின் சார்பில் வில்லியம்சன் 75 ஓட்டங்களையும் டி.எச்.எம் லதம் 58 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த இந்திய அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 377 ஓட்டங்களுக்கு ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதனால் நியூசிலாந்து அணிக்கு 434 ஓட்டங்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 434 என்ற வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி 237 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கட்டுகளை இழந்து 197 ஓட்டங்களால் தேல்வியடைந்துள்ளது.

இதன்மூலம் வரலாற்று சிறப்பு மிக்க இந்தியாவின் 500 ஆவது டெஸ் போடியில் விராட் கோலி தலைமையிலான அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.