வவுனியாவில் தேசியப் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மாணவிக்கு சிறப்பான வரவேற்பு!!

436

1

வவுனியா வடக்கு கனகராயன் குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி வெள்ளிப் பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளமைக்காக நேற்று (18.10.2016) அவருக்கு கௌரவிப்பு நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டியில் நடைபெற்ற பாடசாலைகளுக்கு இடையிலான தேசிய மட்ட விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய வவுனியா வடக்கு கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிலக்சினி 21 வயதிற்கு உட்பட்டவருக்கான குண்டு எறிதல் போட்டியில் 9.76 மீற்றர் தூரத்தில் குண்டு எறிந்து தேசிய ரீதியில் இரண்டாம் இடத்தைப் பெற்று வடமாகாணத்திளற்கும் வவுனியா மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

வவுனியா கனகராயன் குளம் ஆரம்ப பாடசாலையில் இருந்து ஏ வீதி வழியாக குறித்த மாணவியை வாகனத்தில் ஏற்றி பான்ட் வாத்திய இசை முழங்க மாணவர்களின் கரகோசத்துடன் கனகராயன் குளம் மகாவித்தியாலயத்திற்கு அழைத்து வந்தனர்.

அங்கு மாணவியையும் அவரது பெற்றோர் உடற்கல்வி ஆசிரியர் ஆகியோரை கௌரவிக்கும் நிகழ்வு சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை, குறித்த மாணவியின் குடும்பம் இறுதிப் போரின் போது இடம் பெயர்ந்து யுத்த அவலங்களை முழுமையாக சுமந்து மீள்குடியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

02 2 3