தங்­கையின் கண­வரால் வெட்டி துண்­டா­டப்­பட்ட பெண்ணின் கை பொருத்­தப்­பட்­டது!!

296

கண்டி முறு­த­லாவ பிர­தே­சத்தில் ஒரே வீட்டில் வசித்­து­வந்த சகோதரிகள் குடும்­பங்­க­ளுக்­கி­டையில் ஏற்­பட்ட மோத­லின்­போது தங்­கையின் கண­வ­ரினால் மணிக்­கட்­டுடன் வெட்டி வேறாக்­கப்­பட்ட மூத்த சகோ­த­ரியின் கையை பெரும் சிர­மத்­துக்கு மத்­தியில் பேரா­தனை வைத்­தி­ய­சா­லையின் வைத்­தி­யர்கள் சத்­திர சிகிச்­சையின் மூலம் வெற்­றி­க­ர­மாக மீள பொருத்­தி­யுள்­ளனர்.

கண்டி தெஹி­யங்க முறுத்­த­லாவ பிர­தே­சத்தில் வசித்து இந்த தம்­ப­தி­யி­ன­ருக்கு திரு­ம­ண­மாகி 10 வரு­டங்­க­ளான போதிலும் அவர்­க­ளுக்கு குழந்­தை­யில்­லா­மை­யினால் சொந்­த­வீட்டில் மனை­வி­யின தந்­தை­யுடன் தனி­மையில் வசித்து வந்­துள்­ளனர்.

இந்த நிலையில் மேற்­படி பெண்ணின் தங்கை திரு­மணம் முடித்து கணவன், பிள்­ளை­க­ளுடன் அப்­ப­கு­தியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்­துள்ளார்.

இத­னை­ய­டுத்து தனது உடன் பிறந்த தங்கை என்­ப­தனால்  இவரை வாடகை வீட்­டி­லி­ருந்த அழைத்து வந்­தது அவ­ரு­டைய வீட்­டி­லேயே குடி­யேற்­றி­யுள்ளார்.

இவ்­வாறு குடி­யேறி சுமார் 2 மாதங்கள் கழிந்த நிலையில், தான் தற்­கா­லி­க­மாக குடி­யி­ருக்கும் வீட்­டினை கைப்­பற்­றிக்­கொள்ளும் பொருட்டு தங்­கையின் கணவர்  திட்டம் தீட்­டி­யுள்ளார்.

இந்­நி­லையில், சம்­பவ தினத்­தன்று கருத்து வேறு­பாடு கார­ண­மாக இரு குடும்­பத்­தா­ரி­டையே மோதல் ஏற்­பட்­டுள்­ளது.

அதன்­போது தங்­கையின் கணவர் கத்­தி­யொன்றை எடுத்து தனது மனை­வியின் சகோ­த­ரியின் கையை துண்­டித்­த­துடன் அதனை தடுக்­க­வந்த தனது மனை­வி­யையும் தாக்­கி­யுள்­ள­தாக தெரி­ய­வந்­துள்­ளது.

பின்னர் கை துண்­டிக்­கப்­பட்ட பெண்ணை அழைத்­துக்­கொண்டு அவ­ரது கணவர் உட­ன­டி­யாக பொலிஸ் நிலை­யத்­துக்கு சென்று முறைப்­பாடு செய்­து­விட்டு அவரை பேரா­தனை வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­தித்­துள்ளார். அத்­துடன் காய­ம­டைந்த அவ­ரது தங்கை கண்டி வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

துண்­டாக்­கப்­பட்ட மணிக்­கட்டுக் கீழா­க­வுள்ள கையை வீட்டின் சமை­யறை “சின்க்” இல் போட்­டு­விட்டு வந்­தி­ருந்­த­மை­யினால், பேரா­தனை வைத்­தி­யர்கள்,  இப்­பெண்ணின் தந்­தையை வீட்­டுக்கு அனுப்பி துண்­டிக்­கப்­பட்ட கைப்­ப­கு­தியை எவ்­வா­றேனும் பாது­காப்­பான முறையில் கொண்டு வரு­மாறு கூறி அனுப்­பி­யுள்­ளனர்.

அதன்­பின்னர், கொண்­டு­வ­ரப்­பட்ட கைத்­துண்டை பாரிய சிர­மத்­துக்கு மத்­தியில் பேரா­த­ரனை வைத்­தி­ய­சா­லையின் சத்­திர சிகிச்சை வைத்­தியர் குழு­வினர் பொருத்­தி­யுள்­ளனர்.

கைபொ­ருத்­தப்­பட்டு மூன்று நாட்­க­ளினுள் இரத்த ஓட்டம் குறித்த கையின் ஊடாக இடம்­பெற்­ற­தாக வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

எனினும் அவர் தற்­போ­து­வரை வைத்­தி­ய­சா­லையில் சிகிச்சை பெற்­று­வ­ரு­வ­தாக பேரா­தனை வைத்­தி­யர்கள் தெரி­வித்­தனர்.

இதே­வேளை, சந்­தேக நப­ரான தங்­கையின் கணவர் பேராதனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கண்டி நீதிவான் மன்றில் ஆஜர் செய்யப்பட்டபோது எதிர்வரும் 13 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையம் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பேராதனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் ஆரியவங்ச தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் துணையுடன் நேற்று பொலிசில் புகார் தெரிவித்ததை அடுத்து தாயாரையும் அந்த இளம்பெண்ணையும் மருத்துவ பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்துள்ள பொலிசார், இதுவரை குற்றவாளிகளை கைது செய்யவில்லை என்பது மட்டுமல்ல, விசாரணை நடைபெற்று வருவதாக மழுப்பல் பதிலை அளித்துள்ளனர்.