பாதுகாப்பை அதிகரிக்க வட்ஸ் அப்பின் அதிரடி நடவடிக்கை!!

319

இன்று பேஸ்புக்கிற்கு அடுத்ததாக அதிகளவில் பாவிக்கப்பட்டு வரும் சேவையாக வட்ஸ்அப் காணப்படுகின்றது.

எனினும் இச் சேவையில் பல்வேறு பாதுகாப்பு குறைபாடுகள் காணப்படுவதனால் தகவல்கள் திருட்டுப் போகும் சந்தர்ப்பங்களும் அதிகமாகவே காணப்படுகின்றன.

இதனைக் கருத்தில் கொண்டு அந்நிறுவனம் தற்போது சற்று வித்தியாசமான இரு படி சரிபார்ப்பினை (Tow Step Verification) அறிமுகம் செய்துள்ளது.

இதில் வட்ஸ் அப்பினை கணக்கினை உருவாக்க தேவையான மொபைல் நம்பர் உட்பட 6 டிஜிட் கடவுச் சொல் ஒன்றும் அவசியம் ஆகும்.

இவ்வாறு கணக்கு சரிபார்க்கப்பட்ட பின்னர் அதே நாளில் இருந்து 7 நாட்களுக்கு குறித்த கடவுச் சொல் இன்றியே மீண்டும் மீண்டும் வட்ஸ் அப்பினை பயன்படுத்த முடியும்.

குறித்த 7 நாட்களுக்கு பின்னர் மீண்டும் மொபைல் நம்பரினை மீள் சரிபார்ப்பு (Reverify) செய்ய வேண்டும்.

தவறுதலாக 7 நாட்களைத் தாண்டி மீள் சரிபார்ப்பு செய்யின் இடைப்பட்ட காலத்தில் பெறப்பட வேண்டிய குறுஞ்செய்திகள் உட்பட ஏனைய தரவுகள் முற்றாக அழிவடைந்து விடும். அவற்றினை மீண்டும் பெற முடியாது.

இவ்வாறு 30 நாட்கள் வரை மீள் சரிபார்ப்பு செய்யாது விடின் வட்ஸ் அப் கணக்கே அழிக்கப்பட்டு விடும். அதன் பின்னர் புதிதாக வட்ஸ் அப் கணக்கு ஆரம்பிக்க வேண்டியிருக்கும்.