மத்திய கிழக்கு நாடொன்றில் தொழிலுக்குச் சென்று சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த பணிப்பெண் ஒருவரின் சடலம் இன்று இலங்கைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
பசறையைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தாயான 36 வயதான பெண் ஒருவருடைய சடலமே நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவர் இரண்டாவது தடவையாக தொழிலுக்கு சென்றிருந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்நோக்கியிருந்ததாக உறவினர்கள் குறிப்பிட்டனர்.
ஆறு மாதங்களுக்கு முன்னதாக இவர் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இந்த மரணம் தொடர்பில் கட்டுநாயக்க பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
Share the post "கனவுகளுடன் தொழிலுக்காக சென்றிருந்த பெண் சடலமாக வந்த சோகம்!!"