புதிய வசதியை அறிமுகம் செய்யும் வட்ஸ்அப்!!

493

வைபர் செயலிக்கு போட்டியாக காணப்படும் வட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன.

இவற்றின் வரிசையில் சேமிப்பு கொள்ளளவு பயன்பாட்டினை முகாமைத்துவம் செய்யக்கூடிய வசதி ஒன்று விரைவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இவ் வசதியின் ஊடாக ஒவ்வொரு நபர்களுடனான தொடர்பாடலின்போதும் சேமிக்கப்பட்ட மற்றும் பரிமாறப்பட்ட குறுஞ்செய்திகளின் அளவு, கோப்புக்களின் எண்ணிக்கை மற்றும் அவற்றின் கொள்ளளவு என்பவற்றினை கண்காணிக்க முடியும்.

முன்னர் இவ்வாறான பரிமாற்றங்களை அழிக்கக்கூடிய வசதி மட்டுமே தரப்பட்டிருந்தது. ஆனால் புதிய வசதியின் மூலம் தேவையான கோப்புக்களை வைத்துக்கொண்டு ஏனையவற்றினை அழிக்கக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதன் முறையாக iOS சாதனங்களில் தரப்படவுள்ள இவ் வசதி விரைவில் Android சாதனங்களிலும் கிடைக்கப்பெறும்.