முதலாவது T20 போட்டியில் இலங்கை அணி அபார வெற்றி!!

403

இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான முதலாவது இருபதுக்கு 20 போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுகளால் அபார வெற்றிபெற்றுள்ளது.

போட்டியில் முதலில் துடுப்பாடிய பங்களாதேஸ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கட்டுக்களை இழந்து 193 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 16.4 ஓவர்கள் நிறைவில் 4 விக்கட்டுக்களை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

இலங்கை அணி சார்பில் குசல் மென்டிஸ் 27 பந்துகளில் 53 ஓட்டங்களையும், தசுன் சானக ஆட்டமிக்காமல் 24 பந்துகளில் 42 ஓட்டங்களையும், திஸர பெரேரா 18 பந்துகளில் 39 ஓட்டங்களையும் பெற்று வெற்றிக்கு வழிவகுத்தனர்.

போட்டியின் சிறப்பாட்டக்காரராக குஷால் மெண்டிஸ் தெரிவுசெய்யப்பட்டார்.