28 ஆண்டுகளுக்கு பிறகு சாதனை வெற்றியினால் மகிழ்ச்சியில் டோனி!!

265

England v India: 2nd Investec Test - Day Five

லண்டன் லோர்ட்ஸில் 28 ஆண்டுகளுக்கு பிறகு இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெற்றதால் அணித்தலைவர் டோனி உற்சாகத்தில் இருக்கிறார்.

நேற்று நடந்த லண்டன் லோர்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்தியா, இங்கிலாந்தை 95 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா 7 விக்கெட்டை வீழ்த்தினார். முகமது சமி மற்றும் ஜடேஜா தலா ஒரு விக்கெட்டை கைப்பற்றினர்.

2வது இன்னிங்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோ ரூட் மட்டும் அதிகபட்சமாக 66 ஓட்டங்கள் எடுத்தார். இந்த டெஸ்ட் போட்டியில் அசத்திய இஷாந்த் சர்மா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

1932ம் ஆண்டில் இருந்து 17வது முறையாக லோர்ட்ஸில் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி இங்கு ஒரே ஒரு டெஸ்டில் மட்டுமே (1986ம் ஆண்டு கபில்தேவ் தலைமையில்) வெற்றி பெற்றிருந்தது.

ஆனால் தற்போது லோர்ட்ஸில் 28 ஆண்டுகள் கழித்து மீண்டும் வெற்றி பெற்று வரலாறு படைத்துள்ளது.