ஷாலினி மீண்டும் கர்ப்பம் : மகிழ்ச்சியின் உச்சத்தில் அஜித்!!

291

A

தமிழில் அமராவதி படம் மூலம் அறிமுகமானவர் அஜித். இப்படத்தை தொடர்ந்து சில படங்கள் நடித்தாலும் ஆசை படம் இவருக்கு வெற்றிப்படமாக அமைந்தது. அதன்பிறகு இவர் நடித்த காதல் கோட்டை, காதல் மன்னன், வாலி, அமர்க்களம், தீனா, பூவெல்லாம் உன் வாசம், வில்லன், அட்டகாசம், வரலாறு, கீரிடம், பில்லா, அசல், மங்காத்தா, பில்லா 2, வீரம் போன்ற பல படங்கள் வெற்றிப் படங்களாக அமைந்தன.

அமர்க்களம் படத்தில் நடிக்கும்போது அவருடன் ஜோடியாக நடித்த ஷாலினியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் கடந்த 2000ம் ஆண்டு நடந்தது. இவர்களுக்கு 4 வயதில் அனோஸ்கா என்ற பெண் குழந்தை இருக்கிறார்.

இந்நிலையில் ஷாலினி மீண்டும் கர்ப்பமாகியிருக்கிறாராம். இதனால் அஜித் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருக்கிறார். இரண்டாம் குழந்தையின் வருகையை எதிர்பார்த்து, தனது மனைவி ஷாலினியை கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறாராம்.

அஜித் தற்போது கௌதம் மேனன் இயக்கிவரும் படத்தில் நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா, திரிஷா நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்புகளில் பிசியாக இருந்தாலும் அஜித் தன் மனைவி ஷாலினி மற்றும் மகளை கவனமாக பார்த்து வருகிறார்.