வவுனியாவில் இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா தொகுதிக்கிளை புதிய நிர்வாகம் தெரிவு!!

388

Vav

இலங்கையின் பழம்பெரும் கட்சியான இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா தொகுதிக்கிளையின் புதிய நிர்வாகம் தெரிவுசெய்யப்பட்டுள்ளது. வவுனியா மாவட்ட கிளைத்தலைவர் திரு டேவிட் நாகநாதன் தலைமையில் அண்மையில் (27.07.2014) நடைபெற்ற விசேட பொதுக்கூட்டம் வவுனியா சுவர்க்கா ஹோட்டலில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் கட்சியின் செயலாளர்நாயகம் திரு.மாவை சேனாதிராஜா,பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், மற்றும் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்பொது பின்வருவோர் வவுனியா தொகுதிக்கிளையின் புதிய நிர்வாகிகளாக தெரிவுசெய்யப்பட்டனர்.

தலைவர் – திரு டேவிட் நாகநாதன்
துணைத்தலைவர் – திரு.ப.சத்தியலிங்கம் (சுகாதார அமைச்சர்)
செயலாளர் – திரு.சி.சிவசோதி
உப செயலாளர் – திரு.மு.முகுந்தரதன்
பொருளாளர் – திரு.திரு.தி.கோபி
இணைப் பொருளாளர் – திரு.பரராஜசிங்கம்

உறுப்பினர்கள்

திரு.திரு.நா.சேனாதிராஜா
திரு.க.சிவலிங்கம்
திரு.றோய் ஜெயக்குமார்
திரு.ச.வாமதேவன்
திரு.காசிநாதர்
திரு.கருணாநிதி
திரு.க.வேல்மாறன்
திரு.செல்வரட்ணம்
திரு.பாரதி ஆனந்தன்