வவுனியாவில் நடைபெறவுள்ள சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு!!

293

va

சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஏற்பாட்டில் முத்தமிழ் சங்கமம் நிகழ்வு எதிர்வரும் சனிக்கிழமை மாலை 2.00 மணிக்கு வவுனியா சிந்தாமணி பிள்ளையார் கோவில் கலாசார மண்டபத்தில் பேரவையின் தலைவர் சைவ சித்தாந்த முதுமானி சிவ.கஜேந்திரகுமார் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்விற்கு சிவபூமி அறக்கட்டளை நிலைய தலைவர் கலாநிதி ஆறு.திருமுருகன் அவர்கள் முதன்மை விருந்தினராகவும், பேராதனை பல்கலை கழக தமிழ் துறை தலைவர் பேராசிரியர் வ.மகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராகவும், யாழ்ப்பாணம் பல்கலைகழக தமிழ் துறை தலைவர் கி.விசாகரூபன் அவர்கள் சிறப்பு விருந்தினராகவும், சர்வதேச இந்து இளைஞர் பேரவையின் ஸ்தாபகர் சி.கணேஷ்குமார் விசேட விருந்தினராகவும் வவுனியா பிரதேச செயலாளர் கா.உதயராசா, செட்டிக்குள பிரதேச செயலாளர் என்.கமலதாசன், நெடுங்கேணி பிரதேச செயலாளர் கா.பரந்தாமன் ஆகியோர் கௌரவ விருந்தினராக கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இந் நிகழ்விலே ஆசியுரையினை சுன்னாகம் கதிரமலை சிவன் கோவில் பிரதம குரு கலாநிதி நா.சர்வேஸ்வர குருக்களும் வவுனியா கருமாரியம்மன் பிரதம குரு நா.பிரபாகர குருக்களும் வழங்கவுள்ளனர்.

வரவேற்புரையினை புதுக்குடியிருப்பு கலாசார உத்தியோகத்தர் மானியூர் வி.பிரதீபன் அவர்களும் வாழ்த்துரையினை வவுனியா மாவட்ட கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் அவர்களும் சிறப்புரையினை கலாநிதி தமிழ் மணி அகளங்கன் அவர்களும் நிகழ்த்தவுள்ளனர்.

வீராச்சாமி கரன் குழுவினர்களின் மங்கள வாத்தியம், பூந்தோட்டம் நர்த்தனாலய மாணவர்களின் நடனம், திருமதி.ர.அருந்ததி அவர்களின் மாணவர்களின் இசையமுதம், வாத்திய கலாலய மாணவர்களின் வயலின் இசை, கவிஞர் குரும்பையூர் த.ஐங்கரன் தலைமையில் சிறப்பு கவியரங்கமும் வவுனியா மாவட்ட தமிழ்ச்சங்க செயலாளர் தமிழருவி த.சிவகுமாரன் தலைமையில் சிறப்பு பட்டி மன்றமும் கூமாங்குளம் சிதம்பரேஷ்வரம் நாட்டிய பள்ளி மாணவர்களின் எங்கள் தமிழ் எங்கே என்ற நாட்டிய நாடகமும் இடம் பெறவுள்ளதொடு பெரியோர் கௌரவிப்பும் நிகழவும் இடம் பெறவுள்ளது.

இறுதி நிகழ்வாக பேரவையின் செயலாளர் ல.சதீஷ்குமார் அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்வு நிறைவு பெறும்.