வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்த நிலையில் அப்பகுதியெங்கும் துர்நாற்றம் : பொதுமக்கள் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை!!

1308

வவுனியாவில் நேற்று பெய்த மழையின் பின்னர் வவுனியா குளத்தில் பெருமளவிலான மீன்கள் இறந்தநிலையில் காணபடுகின்றது.

மேற்படி குளத்தை சூழவுள்ள பிரதேசமெங்கும் துர்நாற்றம் வீசுவதாக பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர். வவுனியா குளத்தை புனரமைக்கும் மற்றும் ஆழமாக்கும், அத்துடன் அழகுபடுத்தும் செயல் திட்டம் நடைபெற்று வருகின்றமை பொதுமக்கள் அறிந்த விடயம்.

மேற்படி மீன்களின் இறப்புக்கு இதுவரை காரணமெதுவும் கண்டுபிடிக்கபடவில்லை. எனினும் சம்பந்தப்பட்ட தரப்புகள் இதன் மேல் கூடிய கவனமெடுத்து இறந்த மீன்களை அப்பிரதேசத்திலிருந்து அகற்றும்படி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

-பண்டிதர்-

13 14 15 16 17 18 19