வட பகுதியில் அதிகரித்து வரும் மோசடிகள்!!

385

Fraud

வட மாகாணத்தில் மோசடிகள் அதிகரித்து வருவதாக லஞ்ச ஊழல்களுக்கு எதிரான சட்ட ஆலோசனை நிலையத்தின் வட பிராந்திய இணைப்பாளர் ரவீந்திர டீ சில்வா தெரிவித்துள்ளார்.

வட பகுதியில் நில அபகரிப்பு, இந்திய வீட்டுத் திட்டத்தில் மோசடி, ஊழல் மோசடி, நிதிப் பிரச்சனை தொடர்பான மோசடிகளே அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

கடந்த 20 நாட்களில் இவ்வாறான 600 முறைப்பாடுகள் எமக்கு கிடைக்கப் பெற்றுள்ளன. இவ்வருடம் ஜனவரி மாதத்தில் இருந்து ஜூலை மாதம் வரையிலான ஏழு மாத காலப்பகுதியில் இவை தொடர்பில் எமக்கு 929 முறைப்பாடுகள் கிடைத்தன.

அவற்றில் நிலப் பிரச்சினை, நிர்வாகப் பிரச்சினை, ஆவணங்களை பெறுவது தொடர்பான பிரச்சினை என்பன தொடர்பில் கிடைக்கப்பெற்ற 318 முறைப்பாடுகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள சிக்கலுக்குரிய முறைப்பாடுகள் குறித்து தொடர்புடைய திணைக்களங்கள், அதிகாரிகள் மற்றும் நபர்களுடன் கலந்துரையாடி பிரச்சினைகளைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துவருகிறோம் எனத் தெரிவித்தார்.