வவுனியா பட்டாணிச்சூர் புளியங்குள வறிய மாணவர்களுக்கு கற்றல் உபகரணம் வழங்கிய இளந்தளிர் கல்வி அறகட்டளை!!

776

வறுமைகோட்டுக்கு உட்பட்ட பட்டாணிச்சூர், பட்டகாடு, வேப்பங்குளம் மாணவர்களுக்கு சமுர்த்தி உத்தியோகத்தர் திரு.ம.ரமேஷ் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்புக்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக இளந்தளிர் கல்வி அறகட்டளை நிறுவனம் வழங்கிய ஒரு தொகுதி கற்றல் உபகரணங்களில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு ம.ரமேஷ் தெரிவு செய்த 32 மாணவர்களுக்கு நேற்று (29.08) வவுனியா வேப்பங்குளத்தில் அமைந்துள்ள சமுர்த்தி வங்கி கட்டடத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டது.

பட்டாணிச்சி புளியங்குள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.ரமேஷ் தலைமையில் நடந்த இந்த நிகழ்வில் வவுனியா பிரதேச செயலக கணக்காளர் திரு .ப.ஜெயபாஸ்கர், சமுர்த்தி தலைமைப் பீட முகாமையாளர் திருமதி.சா.சந்திரகுமார், வேப்பங்குளம் சமுர்த்தி வங்கி சங்க முகாமையாளர் செல்வி ப.ஞானகி, பட்டாணிச்சூர் புளியங்குள சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர் ம.ரமேஷ், முன்னாள் நகரசபை உறுப்பினரும், வணிக கைத்தொழில் அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான அப்துல் பாரி, முன்னாள் நகரசபை உறுப்பினரும் நீதி அமைச்சின் வவுனியா மாவட்ட இணைப்பாளருமான முனாபார், தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினர் பா.ஜோர்ச், வேப்பங்குளம் வங்கி சங்க தலைவர் அ.அ,ஜருஸ் இவர்களுடன் தமிழ் விருட்சம் சமுக ஆர்வலர்கள் அமைப்பின் சந்திரகுமார் (கண்ணன்). கலைஞர் மாணிக்கம் ஜெகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DSCN1406 DSCN1411 DSCN1414 DSCN1415 DSCN1416 DSCN1419 DSCN1426 DSCN1428 DSCN1431 DSCN1434 DSCN1438 DSCN1441 DSCN1445 (1) DSCN1448 DSCN1451 DSCN1457