கிளிநொச்சியில் குளத்தில் மூழ்கி மூன்று உயர்தர மாணவிகள் பரிதாபமாக பலி!!2ம் இணைப்பு!!

305

2ம் இணைப்பு

கிளிநொச்சி செல்வா நகரைச் சேர்ந்த மூன்று மாணவிகள் இன்று அருகில் உள்ள கந்தன் குளத்தில் குளிக்கச் சென்ற வேளை நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவிகளான ஒரே குடும்பத்தை சேர்ந்த பாலசரவணபவன் நவதாரணி, பாலசரவணபவன் தாட்சாயிணி ஆகியவர்களும் இரத்தினராசா நிசாந்தினி என்பவரும் பரிதாபகரமாக நீரில் மூழ்கி பலியாகியுள்ளனர்.

இவர்கள் மூவரும் கிளிநொச்சி இந்துக்கல்லூரி மாணவர்களென தெரிவிக்கப்படுகின்றது.

கடும் வரட்சி காரணமாக வற்றி சேறாக காணப்படும் குளங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக ஆபத்தான நிலைகளில் குளித்து வருகின்றார்கள்.

கிளிநொச்சியில் ஏற்பட்டிருக்கின்ற மிகப்பெரும் வரட்சியும் நீர் பற்றாக்குறையுமே குளங்கள் நோக்கி மக்களை செல்ல வைத்திருக்கின்றது.

குளங்களும் வற்றி ஆபத்தான நிலையில் காணப்படும் சந்தர்ப்பத்தில் இந்த இளம்பிஞ்சுகளின் மரணங்கள் நிகழ்ந்திருக்கின்றன.

1 2 3 4 5 6 7

1ம் இணைப்பு

கிளிசொச்சி, கிருஸ்ணபுரம் பகுதியைச் சேர்ந்த மாணவிகள் மூவர் குளத்தில் குளிக்கச் சென்ற நிலையில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இந்த துயரச் சம்பவம் நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குளத்தில் குளிப்பதற்காக நான்கு பெண்கள் சென்றதுடன் அதில் மூவர் உயிழந்துள்ள நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை இதுவரை காணவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்துள்ளன.

.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு இந்த வருடம் எதிர்கொள்ளவுள்ள மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். கிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ச.தாட்சாயினி (17) அவரது சகோதரியான ச.நவதாரணி (11), விநாயகபுரத்தைச் சேர்ந்த எஸ்.நிசாந்தினி (19) ஆகியோரே குளத்தில் உள்ள சேற்றில் சிக்கி உயிரிழந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது.

தற்போது நிலவி வரும் வரட்சியினால் குறித்த மாணவிகளின் வீட்டில் உள்ள கிணறுகள் வற்றிய நிலையிலேயே குறித்த நால்வரும் குளத்தில் குளிக்கச் சென்றதாக உறவினர்கள் தெரிவித்தனர்.