வவுனியா மாணவர்கள் கராத்தே போட்டியில் சாதனை!!

519

Karate

ஜப்பான் கராத்தே சம்மேளனம் இலங்கை கிளையினால் 12.09.2014 வெண்ணம்புவ அல்பேட்பீரீஸ் விளையாட்டு உள்ளக அரங்கில் இரண்டாவது சர்வதேச கராத்தே சுற்றுப்போட்டி இடம்பெற்றது.

இப்போட்டியில் வவுனியா மாவட்ட சர்வதேச கராத்தே அமைப்பின் கீழ் வடமாகாண தலைவரும் பயிற்றுனருமான உயர் திரு.சென் சே.க.மோகன்ராஜ் 3rd DAN(IKA) அவரின் மாணவர்கள் கலந்து கொண்டு 4 தங்கப் பதக்கங்கள், 2 வெள்ளி, 4 வெண்கல பதக்கங்களை வென்று வவுனியா மாவட்டத்திற்கும் வடமாகாணத்துக்கும் பெருமை சேர்த்துள்ளனர் என சர்வதேச கராத்தே அமைப்பின் வவுனியா தலைவர் தெரிவித்துள்ளார்.