வாகன விபத்தில் உயிரிழந்த நாகபாம்புக்கு சமய முறைப்படி தகனக்கிரியை!!

404

cobra

வாகன விபத்தில் சிக்கி பலியான ஆலய நாகப்பாமபுக்கு சமய முறைப்படி பாலூற்றி, தகனம் செய்த சம்பவம் நேற்று முன்தினம் வியாழக்கிழமை நிந்தவூரில் இடம்பெற்றது.

நிந்தவூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட, மாட்டுப்பழை மடத்தடி மீனாட்சியம்மன் ஆலயத்தில் நீண்டகாலமாக வசித்து வந்த நாகப்பாம்பு, இவ் ஆலயத்தின் சுற்றுப்புறச் சூழலை புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த கனரக இயந்திரத்தின் முன் பக்கத்தில் சிக்குண்டு, உயிரிழந்துள்ளது.

இவ்வாறு விபத்தில் சிக்கி உயிரிழந்த இந்த நாகபாம்பை ஆலயத் தலைவர் கோ. கமலநாதன், அடியார் மகேந்திரன் ஆகியோர் வெண் சீலையில் கிடத்தி, சமய முறைப்படி பாலூற்றி பின்னர் தகனம் செய்தனர்.

நாக தோஷத்தை தவிர்ப்பதற்காகவே இதனைச் செய்ததாக இவர்கள் தெரிவித்தனர். இந்த நாகபாம்பு சுமார் 6 அடி நீளமானது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.