வவுனியா மன்னார் வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுபடுகாயம்!!

395

வவுனியா மன்னார் வீதியில் மோட்டார் சைக்கிளும் ஆட்டோ ஒன்றும் மோதியதில் ஒருவர் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வவுனியா மன்னார் வீதியில் உள்ள காமினி மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் சென்றுகொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வவுனியா, பூங்காவீதியை நோக்கி திரும்ப முற்பட்ட வேளை பின்னால் வந்த முச்சக்கர வண்டி மோதியதிலேயே இவ் விபத்து இடம்பெற்றது.

இதன் போது மோட்டார் சைக்கிளை செலுத்திய சாரதி காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-படங்கள் விதுசன்-

01 1 2 4