வவுனியா தமிழ் மாமன்றம் நடாத்திய “வன்னியின் வாதச்சமர் 2014” இல் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் வெற்றி!!

395

வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட போட்டிகளின் இறுதிப் போட்டி நேற்று (11.10) வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

04.10.2014 அன்று ஆரம்பமான போட்டிகள் நேற்று இடம் பெற்ற வவுனியா மாவட்ட மாபெரும் இறுதிச்சமருடன் நிறைவெய்தியது.
வன்னியின் வாதச்சமர் 2014 இல் முதல் மூன்று இடங்களைப் பிடித்த அணிகள் வருமாறு..

1. இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்.
2. புதுக்குளம் மகா வித்தியாலயம்
3. கோமரசங்குளம் மகா வித்தியாலயம்

வெற்றியீட்டிய அணிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, இது போன்ற பாடசாலை மாணவர்களுக்கு பயனுள்ள சிறந்த ஒரு நிகழ்வை திறம்பட நடாத்தி முடித்த தமிழ் மாமன்ற உறுப்பினர்களுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் வவுனியா கல்விச் சமூகம் சார்பாகவும் வவுனியா நெற் வாசகர்கள் சார்பாகவும் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

20 21 22 23 24 25 26 027 27 28 29 30

 

வன்னியின் வாதச்சமர் 2014 – வவுனியா மாவட்ட போட்டிகள் முழு விபரம்..

 

தமிழ் மாமன்றம் நடாத்துகின்ற வன்னியின் வாதச்சமர் 2014 எனும் வவுனியா, மன்னார் வவுனியா மாவட்ட பாடசாலைகளுக்கிடையிலான மாபெரும் விவாதப் போட்டியின் வவுனியா மாவட்ட போட்டிகள் கடந்த 04.10.2014 அன்று ஆரம்பமாகியது.

04.10.2014 மற்றும் 05.10.2014 ஆகிய இரு தினங்களும் நான்கு கட்டங்களாக நடாத்தப்பட்ட தகுதிகாண் சுற்றின் அடிப்படையில், தர வரிசையில் முதல் 8 இடங்களைப் பெற்ற பாடசாலை அணிகள் காலிறுதிச்சுற்றுக்கு தகுதி பெற்றன.

1. இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம்
2. வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம்
3. புதுக்குளம் மகா வித்தியாலயம்
4. பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம்
5. கந்தபுரம் வாணி வித்தியாலயம்
6. விபுலானந்த கல்லூரி
7. கனகராயன்குளம் மகா வித்தியாலயம்
8. கோமரசங்குளம் மகா வித்தியாலயம்

இவற்றிற்கிடையேயான காலிறுதி மற்றும் அரையிறுதி போட்டிகள் கடந்த 08.10.2014 அன்று இடம்பெற்றது. காலிறுதியில் கனகராயன்குளம் மகா வித்தியாலயம் எதிர் புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி எதிர் கந்தபுரம் வாணி வித்தியாலயம், பாவற்குளம் கணேஸ்வரா வித்தியாலயம் எதிர் இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகிய அணிகள் சமர் செய்தன. இவற்றில் வெற்றி வாய்ப்பை பெற்று, புதுக்குளம் மகா வித்தியாலயம், விபுலானந்த கல்லூரி, இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம், கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன அரையிறுதிக்குள் நுழைந்தன.

அரையிறுதிச் சுற்றில், இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் எதிர் விபுலானந்த கல்லூரி, புதுக்குளம் மகா வித்தியாலயம் எதிர் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியன சமர் செய்தன. இவற்றில் வெற்றி வாய்பை பெற்று இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் மற்றும் புதுக்குளம் மகா வித்தியாலயம் ஆகியன இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றன.

அரையிறுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த விபுலானந்த கல்லூரி மற்றும் கோமரசங்குளம் மகா வித்தியாலயம் ஆகியவற்றிகிடையே, வவுனியா மாவட்டத்தின் மூன்றாம் நிலை வெற்றியாளரை தீர்மானிக்கின்ற போட்டி இடம் பெற்றது. இச் சமரில் கோமரசங்குளம் மகாவித்தியாலயம் வெற்றி வாய்ப்பை பெற்று, வன்னியின் வாதச்சமர் 2014 இன் வவுனியா மாவட்ட மூன்றாம் நிலை வெற்றியாளராக தெரிவாகியது.

வவுனியா மாவட்ட இறுதிச் சமர் கடந்த 11.10.2014 சனிக்கிழமை, வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தினுடைய ஐயாத்துரை மண்டபத்தில் நடைபெற்றது. தர்மத்தின் வழி நின்றதிலும், தர்மத்தை போதித்ததிலும் சிறந்து நிற்பது, இராமவதாரா? கிருஸ்ணவiதாரமா? என்ற தலைப்பில் இடம் பெற்ற சுவரஸ்மான சமரில், இராமவதாரம் என புதுக்குளம் மகா வித்தியாலயமும், கிருஸ்ணவதாரம் என இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயமும் சமர் செய்தன. ஓன்றுகொன்று சளைக்காத அணிகள், காரசாரமாய் விவாதித்துக் கொண்டன.

வன்னியின் வாதச்சமர் 2014 இனுடைய வவுனியா மாவட்ட வெற்றியாளராக இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயமும் தெரிவானது. இரண்டாம் நிலை வெற்றியாளராக புதுக்குளம் மகா வித்தியாலயமும் தெரிவுசெய்யப்படது.

இவ் இறுதிச் சமரில் நோக்குனர்களின் கருத்துக்கணிப்பும் எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. நோக்குனர்களின் கருத்துக்கணிப்பில், இறம்பைக்குளம் மகளீர் மகா வித்தியாலயம் 60% ஆன வாக்குகளையும், புதுக்குளம் மகா வித்தியாலயம் 40% ஆன வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

விரைவில் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட போட்டிகள் இடம் பெறவுள்ளது. ஆப் போட்டிகளைத் தொடர்ந்து, மூன்று மாவட்டத்திலும் வெற்றி பெற்ற அணிகளுக்கிடையிலான, மாபெரும் இறுதிச்சமர் இடம் பெறவுள்ளது.

வெற்றி பெற்ற அணிகளுக்கான, கேடயம், பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள், தமிழ் மாமன்றத்தின் வருடாந்த இயல் விழாவில் வைத்து வழங்கப்படும்.