விஞ்ஞானி நியூட்டனை அசத்திய நண்பரின் யோசனை!!

308

Newton

புவியீர்ப்பு விசை இருப்பதை உலகிற்கு கண்டுபிடித்து சொன்ன அறிவியல் மாமேதை ஐசக் நியூட்டன் வாழ்வில் நடந்த சுவையான சம்பவம்.

நியூட்டன் தனது ஆராய்ச்சி கூடத்தில் ஒரு நாள் ஆராய்ச்சி ஈடுபட்டிருந்தபோது அவரை பார்ப்பதற்காக நண்பர் ஒருவர் வந்துள்ளார்.
அந்த நண்பர் நியூட்டனின் ஆராய்ச்சி கூடத்தில் உள்ள அறை கதவு ஒன்றில் சிறியதும் பெரியதுமாக இருந்த இரண்டு வட்ட துவாரங்களை பார்த்துள்ளார்.

இதனால் சந்தேகம் அடைந்த அந்த நபர், நியூட்டனிடம், அந்த அறைக் கதவில் இரண்டு துவாரங்கள் போடப்பட்டுள்ளதே. அது எதற்காக என்று வினவியுள்ளார். அதற்கு நியூட்டன், அது வேறொன்றுமில்லை. நான் சிறியதும் பெரியதுமாக இரண்டு பூனைகள் வளர்க்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பதிலைக் கேட்ட நியூட்டனின் நண்பர், அதற்கு இரண்டு துவாரங்கள் அவசியமே இல்லையே. பெரிய துவாரம் வழியாகவே சிறிய பூனையும் நுழைந்து செல்லலாமே என்று கூறியுள்ளார்.

இந்த யோசனையை கேட்ட நியூட்டன், அட ஆமாம், நீங்கள் சொல்வது சரிதான். எனக்கு இது தோன்றாமல் போய்விட்டதே என்று ஆச்சர்யப்பட்டுள்ளார்.