வவுனியா விபுலானந்தாவின் முன்னாள் அதிபர் சி.வி.பேரம்பலம் மற்றும் எம்மை வழிப்படுத்திய ஆசிரியர்களுக்கு நன்றிகூறிய பழைய மாணவன்!(படங்கள் ,காணொளி)

721

DSC_0392

பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியின் 20.02.2015 வெள்ளிக்கிழமையன்று இடம்பெற்ற  வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போது வருகை தந்திருந்த கல்லூரியின் பழைய மாணவனும் சக்தி வானொலியின் சிரேஸ்ட அறிவிப்பாளருமான தேவசகாயம் செல்டன் அன்டனி கல்லூரியில் கல்வி பயிலும் வறுமைக்கோட்டுக்கு கீழ் வசிக்கின்ற மாணவர்களுக்கு ஒருதொகுதி கற்றல் உபகரணங்களை சக்தி எப் எம் வானொலியின் சார்பில் கல்லூரி அதிபர் கே தனபாலசிங்கத்திடம் கையளித்தார்.

மேலும் கல்லூரியின் விளையாட்டு போட்டியின் நிறைவில் உரையாற்றிய செல்டன் வெற்றி என்பது பெற்றுகொள்ள தோல்வி என்பது கற்றுகொள்ள என்றும் மாணவர்கள் வெற்றி தோல்வி என்பவற்றை சமமாக ஏற்று கொள்கின்ற மனநிலை மாணவர்கள் மத்தியில் தோற்றம் பெறவேண்டும் எனவும் கல்வி தான் எம் எல்லோரையும் வாழ்வின் உயர்வுக்கு கொண்டு செல்லக்கூடியது .அத்தகைய கல்வியை கற்பதற்கு நாம் இறக்கும் வரைகல்வியை கற்றுகொள்ளமுடியும் எனவும் குறிப்பிட்டார் .

தன்னுடடைய பாடசாலை காலங்களை நினைவு கூர்ந்ததோடு இன்று அகில இலங்கையில் தானும் ஒரு அறிவிப்பாளனாக திகழ்வதற்கு இந்தபாடசாலையின் முன்னாள் அதிபர் திரு சி.வி .பேரம்பலம் அவர்கள் தனக்கு தந்தைக்கு தந்தையாக நின்று பல்வேறுபட்ட உதவிகளை செய்தமைமையை என் வாழ்நாளில் எப்போதும் மறவேன் எனவும்.அப்படிப்பட்ட அதிபரின் காலத்தில் நாமெல்லாம் பட்டை தீட்டிய வைரங்களாய் இந்தபாடசாலையில் இருந்து வெளியேறியுள்ளோம். அது மட்டுமல்லாமல் அன்று எங்களுடனும் இன்று உங்களுடனும் இருக்கின்ற எங்களது அன்புக்குரிய ஆசான்கள் தான் இன்றும் எம்மையெல்லாம் வாழிவினில் உயர்த்திய உத்தம சிற்பிகளாகவே என் கண்களுக்கு புலப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய செல்ரன் பலமுனைகளிலும் முன்னேற்றம் கண்டுவரும் வவுனியா விபுலானந்தா கல்லூரி தனது வெற்றிப் பயணத்துக்கு ஒரு மைதானம் இல்லாததுதான் பெரும் குறையாக உள்ளதாகவும் அதனை பூர்த்தி செய்ய மேடையில் அமர்ந்திருந்த பிரதி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அத்தோடு பழைய மாணவர்கள் பெற்றோர் வர்த்தகபெருமக்கள் அனைவரும் செயல்திறன் கொண்ட கல்லூரியின் புதிய அதிபரான தனபாலசிங்கம் அவர்களோடு கைகோர்த்து கல்லூரிக்கு மைதானம் ஒன்றை பெறக்கூடிய வழிவகைகளை மேற்கொள்ளவேண்டும் எனவும் கேட்டுகொண்டார் .

கடைசியில் வாழ்கையில் எவரேனும் எந்த கீழ்மட்டத்தில் இருந்தாலும் அல்லது வறுமையில் வாடினாலும் நம்பிக்கை என்ற ஒன்று இருக்குமானால் உங்களால் எப்போது சமூகத்தின் உயர்ந்த நிலைக்கு வந்து சேரமுடியும் .நம்பிக்கையோடு செயல்படுங்கள் நாளை உங்கள் கைகளில் எனவும் கூறிசென்றார் .

வவுனியா நெற் செய்திகளுக்காக கஜன்